Spoiler Alert. “சிறை” படம் பார்க்காதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம். படம் பார்த்துவிட்டு வந்து படித்துக் கொள்ளுங்கள். சிறை படம் பார்த்துவிட்டு வந்திருக்கிறேன். விவரிக்க முடியாத உணர்வுகளால் நெஞ்சம் நிறைந்திருக்கிறது. மனதை சற்று லேசாக்கிக் கொள்ளவே இதை எழுதுகிறேன். தமிழ் சினிமா பத்தாண்டுகளுக்கு ஒரு முறை ஒரு முத்தினைத் தேடி எடுக்கும். “சிறை” அப்படி ஒரு முத்து. உண்மைச் சம்பவங்களில் இருந்து நேரடியாகவோ, அதனைத் தழுவியோ வரும் படைப்புகள் மிகுந்த தாக்கத்துடன் இருப்பதற்குக் காரணங்கள் இரண்டு … Continue reading சிறை
Tag: சினிமா
கெட்ட பய சார் !
விவரம் தெரிந்து தியேட்டரில் பார்த்த முதல் ரஜினி படம் தளபதி. அப்பாவும் நானும் மட்டும் சென்று பார்த்த முதல் ரஜினி படமும் அதுதான். அதனால் தானோ என்னவோ இன்னமும் நினைவில் உள்ளது. கறாரான அப்பா. ஒரு முறை டாடி என்று அழைத்ததற்கு “என்னடா செல்லம் வேண்டிக் கெடக்கு ராஸ்கல்" என்று வெளுத்து விடும் அளவுக்கு ஸ்டிரிக்ட் ஆபிசர். படுக்கை விரிப்பை பிசிரில்லாமல் மடித்து வைப்பதில் தொடங்கி, புத்தகங்களை அளவு வாரியாக அடுக்கி வைப்பது வரையில் ஒரு இராணுவ … Continue reading கெட்ட பய சார் !
பச்சைப் புத்தகம்
அமெரிக்காவைச் சேர்ந்த விக்டர் க்ரீன் என்பவர் 1936ல் ஒரு புத்தகத்தைப் பதிப்பிக்கிறார். இந்தப் புத்தகம் புனைவோ, கட்டுரைத் தொகுப்போ அல்ல. ஒரு பயண வழிகாட்டி. இது கருப்பின மக்களின் பயன்பாட்டுக்காக மட்டுமே பதிப்பிடப்பட்டது. காரணம், அந்தப் புத்தகத்தில் இருந்தது கருப்பின மக்கள் பாதுகாப்போடு தங்கக்கூடிய இடங்கள் தொடர்பான தகவல் மட்டுமே. தங்கள் பயணங்களின் போது, ஆபத்தான இடங்களைத் தவிர்த்து, தங்களை அனுமதிக்கக் கூடிய விடுதிகள், உணவகங்களின் பட்டியல் அந்தப் புத்தகத்தில் இருந்தது. அனுமதிக்கப்படாத இடங்களில், கருப்பின மக்கள் … Continue reading பச்சைப் புத்தகம்
மெலிதல்
1999ல் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், ரகுமான் மற்றும் விந்தியா நடிப்பில் வெளியான படம் சங்கமம். வடிவேலு, மணிவண்ணன் என்று ஏகப்பட்ட நல்ல கலைஞர்கள் இருந்தும் படம் சரியாகப் போகவில்லை. இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. பாலச்சந்தரின் சீடர். பாட்ஷா, அண்ணாமலை, சத்யா என்று cult classicக்குகளை எடுத்த இவர் எப்படி ஆளவந்தானையும், பாபா-வையும், சங்கமத்தையும் எடுத்தார் என்பது இன்று வரை புரியாத புதிர். படம் சரியாகப் போகவில்லை. ஆனால், ஏ.ஆர். ரகுமான் இசை, வைரமுத்து வரிகள் என பாடல்கள் … Continue reading மெலிதல்
தூங்கல் வங்கம்
இப்போது வரும் பாடல்களில், பத்தில் ஒன்பதையாவது அனிருத் பாடிவிடுகிறார். Spotify, FM என்று எதைத் தட்டினாலும் அனிருத் மயம்தான். அண்மையில் வெளியான மாவீரன் படத்தில், அவர் பாடிய “சீனா சீனா” என்ற ஒரு பாடல் நன்றாக மனதில் ஒட்டிக்கொண்டு விட்டது. குறிப்பாக அதில் வரும், “அன்னாண்ட அன்னாண்ட வங்கக் கரை இன்னாண்ட இன்னாண்ட கோல்டு பேலஸு" என்ற வரிகள். எழுதியவர் கபிலன். இந்த வரியின் மொத்தத் துள்ளலும் வங்கக்கரை எனும் சொல்லில் தான் அடங்கியிருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு … Continue reading தூங்கல் வங்கம்
கதார்சிஸ்
ஹ்வாக்கீன் ஃபீனிக்ஸ் (Joaquin Phoneix) ஒரு அற்புதமான கலைஞன். டிகாப்ரியோ, டாம் க்ரூஸ், கிலியன் மர்ஃபி வரிசையில் எனக்கு மிகப்பிடித்தமான நடிகர்களுள் ஒருவர். இத்தனைக்கும் அவர் நடித்த படங்கள் இரண்டை மட்டுமே பார்த்திருக்கிறேன். ஒன்று 2000த்தில் வெளியான கிளாடியேட்டர், மற்றொன்று 2019ல் வெளியான ஜோக்கர். இரண்டுமே எதிர்மறையான கதாப்பாத்திரங்கள். அவரது முகஅமைப்பும் உடல்மொழியும், எதிர்மறையான கதாப்பாத்திரங்களுக்கு வெகுவாக ஒத்துப் போகிறது என்று நினைக்கிறேன். அவரது முக அமைப்பில் ஏதோ ஒன்று பழைய நடிகர் ஶ்ரீகாந்தை நினைவுபடுத்தும். இயல்பாகவே … Continue reading கதார்சிஸ்
ஷாருக்கானும் பவா செல்லதுரையும்
ஷாருக்கானின் தொழில் மற்றும் அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய “The Inner world of Shahrukh Khan” எனும் டாகுமெண்டரி 2004ல் பிபிசியால் தயாரித்து வெளியிடப்பட்டது. 2010 வாக்கில் முதன் முதலில் அதனைப் பார்த்தேன். இந்த 13 வருடங்களில் அதை பல முறை பார்த்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த டாகுமெண்டரிகளில் ஒன்று அது. எதைப் பற்றியும் சட்டை செய்யாத, பெரிதாக அலட்டிக் கொள்ளாத ஷாருக்கானின் இயல்புக்காக அது எனக்குப் பிடித்திருந்தாலும், நிஜத்துக்கு மிக அருகே அழைத்துச் சென்ற … Continue reading ஷாருக்கானும் பவா செல்லதுரையும்
கால் முளைத்த பூ !
“மாற்றான்” படத்தின் அருமையான பாடல்களில் ஒன்று கால் முளைத்த பூவே. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மதன் கார்க்கி எழுதிய பாடல். மெட்டு, பாட்டு என்று இரண்டு தளங்களிலும் மிகவும் கடினமான பாடல் இது. ஜாவேத் அலி மற்றும் மகாலட்சுமி பாடிய இப்பாடலை பதிவு செய்ய மூன்று நாட்களானது என்று ஹாரிஸ் ஒரு நிகழ்ச்சியில் கூறியிருப்பார். இந்தப் பாடலின் ஆரம்ப வரிகளில் ரஷ்யா தொடர்பான சில சொற்களைப் பயன்படுத்தியிருப்பார் கார்க்கி. வால்கா நதி, பேலே நடனம், கேமாமில் பூ … Continue reading கால் முளைத்த பூ !
கிங்ஸ்மேன்- கஷ்மீரியும் பஷ்மீனாவும்
கிங்ஸ்மேன் படங்களில் சீக்ரெட் சர்வீஸ் (2014), கோல்டன் சர்க்கிள் (2017) வரிசையில், 2021ல் “தி கிங்ஸ்மேன்” வெளியானது. இந்தப் படத்தின் கதை, முந்தைய இரு படங்களுக்கும் prequelஆக எடுக்கப்பட்டுள்ளது. கிங்ஸ்மேன் எனும் பிரிட்டிஷ் ரகசிய உளவு அமைப்பு ஏன் உருவானது, அதன் அலுவலகம் ஒரு தையல் கடையில் அமைந்துள்ள பிண்ணனி முதலியவற்றை முதலாம் உலகப் போரின் உண்மை நிகழ்வுகளோடு தொடர்புபடுத்தி முடிந்த அளவு விறுவிறுப்பாக எடுத்துள்ளனர். சில போர்க்கள காட்சிகள், முழுக்க போர் சார்ந்த திரைப்படங்கள் அளவுக்கு … Continue reading கிங்ஸ்மேன்- கஷ்மீரியும் பஷ்மீனாவும்