வெசக்குட்டாவும் கருப்பனும்

பீடியை ஒரு இழுப்பு இழுத்துவிட்டு, “வெக்கமா இல்ல…. இப்புடில்லாம் பண்ணிட்டு திரியுறதுக்கு” என்ற சொன்ன தொனியில் நிமிர்ந்து உட்கார்ந்தவன், “சோபா சிலுக்கையெல்லாம் கொஞ்ச வயசுலயே கூப்டுகிட்டீக, பவுனுத்தாயிக்கு மட்டும் என்ன பதினாறு வயசா நடக்குது, நேத்துத்தான் சமைஞ்சாளாக்கும்?” என்று தொடங்கி, “நான் கேட்டத நீ குடுக்கலை, வெசக்குட்டாங்கிற என் பேரை சாய்குட்டான்னு மாத்தி வச்சிக்கிட்டு, சாய் பாபாவைக் கும்புடப் போயிருவேன்” என்று வெசக்குட்டா கருப்பனை நோக்கி ஆங்காரமாகப் பேசி முடிக்கும் பொழுது மனதார சிரித்து மாய்ந்திருந்தேன். ‘தாய் … Continue reading வெசக்குட்டாவும் கருப்பனும்

சிறை

Spoiler Alert. “சிறை” படம் பார்க்காதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம். படம் பார்த்துவிட்டு வந்து படித்துக் கொள்ளுங்கள். சிறை படம் பார்த்துவிட்டு வந்திருக்கிறேன். விவரிக்க முடியாத உணர்வுகளால் நெஞ்சம் நிறைந்திருக்கிறது. மனதை சற்று லேசாக்கிக் கொள்ளவே இதை எழுதுகிறேன். தமிழ் சினிமா பத்தாண்டுகளுக்கு ஒரு முறை ஒரு முத்தினைத் தேடி எடுக்கும். “சிறை” அப்படி ஒரு முத்து. உண்மைச் சம்பவங்களில் இருந்து நேரடியாகவோ, அதனைத் தழுவியோ வரும் படைப்புகள் மிகுந்த தாக்கத்துடன் இருப்பதற்குக் காரணங்கள் இரண்டு … Continue reading சிறை