Spoiler Alert. “சிறை” படம் பார்க்காதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம். படம் பார்த்துவிட்டு வந்து படித்துக் கொள்ளுங்கள். சிறை படம் பார்த்துவிட்டு வந்திருக்கிறேன். விவரிக்க முடியாத உணர்வுகளால் நெஞ்சம் நிறைந்திருக்கிறது. மனதை சற்று லேசாக்கிக் கொள்ளவே இதை எழுதுகிறேன். தமிழ் சினிமா பத்தாண்டுகளுக்கு ஒரு முறை ஒரு முத்தினைத் தேடி எடுக்கும். “சிறை” அப்படி ஒரு முத்து. உண்மைச் சம்பவங்களில் இருந்து நேரடியாகவோ, அதனைத் தழுவியோ வரும் படைப்புகள் மிகுந்த தாக்கத்துடன் இருப்பதற்குக் காரணங்கள் இரண்டு … Continue reading சிறை
Category: பொது
பெயர்ச்சொல்
“சூப்பர் பேரு சார்”. என்று நான் சொன்னதற்கு, “என்ன சார்” என்று புருவத்தை உயர்த்தியவர், சடுதியில் புரிந்து கொண்டு, நெஞ்சில் இருந்த பேட்ஜை தொட்டவாறு, “ஹா..ஹா..ரைட் சார்..நன்றி நன்றி” என்று கண்கள் விரிய முகம் மலர்ந்தார். முகம் மலர்ந்தவர், சென்னை விமான நிலையத்தில் இருந்த சி.ஆர்.பி.எஃப் காவலர். பெயர் “பொற்சுடர்”. தூத்துக்குடி செல்லும் விமானத்திற்காக, எனது போர்டிங் பாஸை ஸ்கேன் செய்யும் போது நடந்த மிகச்சிறிய உரையாடல் அது. அத்தனை அழகான பெயர். பெயர் குறித்த இது … Continue reading பெயர்ச்சொல்
மரங்களைத் தொழுதல்
அன்று காலை அலுவலகத்துக்குச் செல்வதற்காக எப்போதும் போல பெருங்குடி சிக்னலில் நின்றிருந்தேன். வலப்புறம் மெட்ரோ வேலைகளுக்கான கட்டுமானம், இடப்புறம் அப்போல்லோ ஆஸ்பத்திரிக்கு கார் பார்க்கிங்காக செயல்பட்டுக் கொண்டிருக்கும் சர்வீஸ் லேன், பத்திருபது அடி முன்னே, பல ஆண்டுகளாக சீர் செய்யப்படாமல் இருக்கும் கிடங்கு, இவற்றினூடே எனக்கான பச்சை விளக்கு ஒளிர காத்துக் கொண்டிருந்தேன். சிக்னல் பச்சையானவுடன், எம்ஜிஆர் சாலையில் நான் நகரத் தொடங்கி வேகமெடுக்கவும், எங்கிருந்து வந்தார் என்று தெரியாமல், எனக்கு எதிர்ப்புறம் இருந்து ஒரு ஷேர் … Continue reading மரங்களைத் தொழுதல்
பொன்னிறப் பாதை
அந்த சிறிய கிளைச்சாலையின் முனையில் இருந்த ஸ்டார்பக்ஸ்லிருந்து எனக்கான ஹாட் சாக்லேட்டை வாங்கிக்கொண்டு வெளியே வந்தேன். கண்ணாடி கதவைத் திறந்தவுடன் குளிர் அப்பிக் கொண்டது. காலை பதினோரு மணிக்கு இப்படியொரு குளிரை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. அத்தனை தடிமனான ஓவர்கோட்டைத் துளைத்து மில்லிசெகண்டுகளுக்குள் நெஞ்சாங்கூட்டை அடைந்து விட்டது. பெரிதாக போக்குவரத்து இல்லாத சாலையைக் கடந்து சென்று மறுபுறம் இருந்த பெஞ்ச்சில் அமர்ந்தேன். உள்ளங்கை முழுக்க ஹாட் சாக்லேட்டின் இளஞ்சூடு பரவியிருந்தது. ஹாட் சாக்லேட் தொண்டையை அடைந்து, நெஞ்சாங்கூட்டை அடையும் … Continue reading பொன்னிறப் பாதை
எல்லார்க்கும் பெய்யும் மழை
“காட்டுச் சுனையைப் போலப் பிரவகிக்கும் மனசு” என்ற சொற்றொடரை, எழுத்தாளர் இயக்குநர் ராஜு முருகன் தனது “வட்டியும் முதலும்” நூலில் பயன்படுத்தியிருப்பார். அவர் சொல்வதைப் போல, “இதனால் நமக்கு என்ன ?” என்ற எதிர்பார்ப்பு இல்லாமல், காட்டுச் சுனையைப் போலப் பிரவகிக்கும் மனசு உள்ளவர்களால் தான், அவர்களைச் சுற்றி இருப்பவர்கள், தங்கள் வாழ்க்கையின் பெரும் மேடுகளை கடந்து செல்ல முடிகிறது. அப்படியான மனது வெகு சிலருக்கே வாய்க்கிறது. அந்த சிலரில் குமரனும் ஒருவர். குமரன் எங்கள் ஊரில் … Continue reading எல்லார்க்கும் பெய்யும் மழை
அறம்
சென்னை மாநகராட்சியின் சுகாதாரத் தொழிலாளர்களில் ஒருவர் நாகராஜ் சார். கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக எனக்கு அவரைத் தெரியும். தெரியும் என்றால், வெறும் அறிமுகம் மட்டும்தான், அதிகப்படியான பழக்க வழக்கமோ, பேச்சுவார்த்தையோ இல்லை. காலை நடைபயிற்சிக்கு செல்லும் போது எதிரே குப்பை வண்டியோடு வருவார். இப்போது இருக்கும் பேட்டரி வண்டி அல்ல, பழைய மீன் பாடி மாடல் வண்டி. ஒற்றைக் கையில் அதனை இழுத்துக் கொண்டு, மற்றொரு கையை அநாயசமாக வீசிக் கொண்டு வருவார். டவுசர், பச்சை … Continue reading அறம்
கெட்ட பய சார் !
விவரம் தெரிந்து தியேட்டரில் பார்த்த முதல் ரஜினி படம் தளபதி. அப்பாவும் நானும் மட்டும் சென்று பார்த்த முதல் ரஜினி படமும் அதுதான். அதனால் தானோ என்னவோ இன்னமும் நினைவில் உள்ளது. கறாரான அப்பா. ஒரு முறை டாடி என்று அழைத்ததற்கு “என்னடா செல்லம் வேண்டிக் கெடக்கு ராஸ்கல்" என்று வெளுத்து விடும் அளவுக்கு ஸ்டிரிக்ட் ஆபிசர். படுக்கை விரிப்பை பிசிரில்லாமல் மடித்து வைப்பதில் தொடங்கி, புத்தகங்களை அளவு வாரியாக அடுக்கி வைப்பது வரையில் ஒரு இராணுவ … Continue reading கெட்ட பய சார் !
யாதும் கேளிர்
மாலை 5.30 மணி இருக்கும். அலுவலகம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். என் வேலை நாளின் இரண்டு சதவிகித நேரத்தை இரக்கமில்லாமல் தின்று செரிக்கும், காமாட்சி மருத்துவமனை சிக்னலில், பாலத்தின் பக்கவாட்டில் நின்றிருந்தேன். எஃப்.எம்-மில், ஏ...சீமை பூராவும் சுத்தி வரும் காட்டாறு எங்க நின்னாலும் அந்த எடம் என் ஊரு சாதி பாக்காத சனமே என் கூட்டு மோதிப் பாத்தாலே முடிப்பேன் பொலி போட்டு என்று பேரன்புக்குரிய அந்தோணிதாசன் அண்ணன் நொறுக்கிக் கொண்டிருந்தார். “கொஞ்சம் கிடைச்சாலும்…. பங்கு … Continue reading யாதும் கேளிர்
ரெக்கார்ட் டான்ஸ்
“பஞ்சாயத்” என்றொரு வெப் சீரிஸ். வன்முறை, வக்கிரமற்ற ஒரு கிராமப்புற டிராமா. குழப்பமான திரைக்கதை, மூளையை சோர்வடையச் செய்யும் உருவகங்களுக்கு மத்தியில், எம்பிஏ படிக்க ஆசைப்பட்டு, அது கிடைக்காமல், ஒரு கிராமத்தின் பஞ்சாயத்து அலுவலகத்தில் செயலாளராக வேலைக்குச் சேரும் கதாநாயகனைச் சுற்றி நடக்கும் லேசான ஒரு கதைக்களம். அந்த வெப்சீரிஸில் ஒரு காட்சி. கிராமத்தில் ரெக்கார்ட் டான்ஸ் நடக்கும் போது வரும் பிரச்சனையில், டான்ஸ் ஆடும் பெண்ணிற்கு காயம் பட்டுவிடும். கதாநாயகன் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று … Continue reading ரெக்கார்ட் டான்ஸ்
பிக்காலி
லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து ஊருக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறேன். நான் பயணித்துக் கொண்டிருக்கும் எமிரேட்ஸ் விமானம், பெட்ரோஸாவோட்ஸ்க் எனும் ரஷ்ய நகரின் மேல் பறந்து கொண்டிருப்பதாக ஜிபிஎஸ் சொல்கிறது. லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து துபாய்க்கு பதினாறு மணி நேரப் பயணம். பின்னார் அங்கிருந்து சென்னைக்கு ஒரு நான்கு மணி நேரம். முப்பதாயிரம் அடி உயரத்தில், வெறுமை மட்டுமே நிரம்பியிருக்கும் இந்த நீண்ட கணங்களில், மனம் திரும்பத் திரும்ப செல்வத்தின் நினைவுகளில் அலைபாய்கிறது. செல்வத்தைப் பற்றி எழுத வேண்டும் என்று … Continue reading பிக்காலி