1943-ல் இரண்டாம் உலகப் போர் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியிருந்தது. வட ஆப்பிரிக்காவைத் தன் வசப்படுத்திய நேச நாடுகள் (Allies), அடுத்ததாக நாஜிக்களின் பிடியிலிருந்த ஐரோப்பாவைக் குறிவைத்தன. ஆப்பிரிக்காவில் இருந்த டுனிசியா (Tunisia) அருகே நிலைகொண்டிருந்த நேச நாடுகளின் படைகள், ஐரோப்பாவிற்குள் நுழைவதற்கான எளிதான வழி இத்தாலியில் இருந்த சிசிலி (Sicily) தீவு. அந்தத் தீவினை, ஒரு முறை வின்ஸ்டன் சர்ச்சில் 'அச்சு நாடுகளின் மென்மையான அடிவயிறு' (Soft underbelly) என்று வர்ணித்தார். அங்கே அடித்தால், ஜெர்மனியின் … Continue reading நிழல் யுத்தம்
Author: sundar bala
வால்கெய்ரி
சனநாயகத்தில் அதிகாரம் என்பது மக்களால் வழங்கப்படுகிற ஒரு தற்காலிகப் பொறுப்பு. அதில் அதிகார மாற்றம் என்பது ஒரு சட்டப்பூர்வமான, அமைதியான வழிமுறையாகவே இருக்கிறது. ஒருமுறை அந்த அதிகாரத்தினை இழந்தாலும், திரும்ப அதனை அடைவதற்கான வாய்ப்புகளும் அதிகம் உண்டு. ஆனால், ஒரு சர்வாதிகார ஆட்சியில் அல்லது முடியாட்சியில், அதிகாரம் என்பது ஒரு தனிமனிதனின் வலு சார்ந்தது. அதனை இழப்பது பெரும்பாலும் அந்தத் தனிமனிதனின் வீழ்ச்சியில் மட்டுமே முடிந்திருக்கிறது. தங்களை ஒரு மேலான சக்தியாகக் கருதும் அதே வேளையில், தங்களுக்கு … Continue reading வால்கெய்ரி
பிறர் தர வாரா ?
பிரிட்டன் மற்றும் அமெரிக்காவைப் போலவே ஒரு பெரிய பேரரசை உருவாக்க வேண்டும் என்று ஜப்பானுக்கு ஒரு குறிக்கோள் இருந்தது. அதற்காக 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஜப்பான் தனது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும், இராணுவத்தை நவீனப்படுத்துவதற்கும் தேவையான முயற்சிகளில் இறங்கியது. இயற்கை வளங்களை சரியாக பயன்படுத்தி, கடல் சார்ந்த வர்த்தக வழிகளை உருவாக்குவதன் மூலம் தங்கள் குறிக்கோளை அடைய முடியும் என்று நம்பினார்கள். ஆனால், ஜப்பானின் சொந்த நிலப்பரப்பில் இரும்பு, நிலக்கரி, எண்ணெய் ஆகிய இயற்கை வளங்கள் இல்லை. ஒரு … Continue reading பிறர் தர வாரா ?
நெறி
வரலாற்றில் இருந்து நாம் கற்றுக் கொள்வதற்கு, இரண்டாம் உலகப் போருக்கு நிகரான வேறு ஒரு களஞ்சியம் இல்லையென்று நினைக்கிறேன். கடந்த நூற்றாண்டின் பேரிடரான இதனுடைய ஆவணங்கள் - தனிமனித செயல்பாடு, அரசியல் அமைப்பு, அறிவியல் என்று பல வேறுபட்ட தளங்கள் சார்ந்த நிகழ்வுகளும், தகவல்களும் கொட்டிக் கிடக்கும் அரிய பெட்டகம். அவை அனைத்திலும் மிக முக்கியமானதொரு ஆவணம் - நாஜி படைகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் நேச நாடுகள் (Allies) நடத்திய நியூரம்பெர்க் விசாரணை (Nuremberg Trials). சோவியத் … Continue reading நெறி
ஊழ்
“The Ministry Of Ungentlemanly Warfare” என்ற திரைப்படம் வெகு நாட்களாக எனது வாட்ச் லிஸ்ட்டில் இருந்தது. கய் ரிச்சியின் (Guy Ritchie) திரைப்படங்களுக்கு மிகப்பெரிய ரசிகன் என்றாலும், படத்தின் போஸ்டர் என்னைப் பெரிதாக ஈர்க்காததால், இதனைப் பார்க்காமல் இருந்தேன். இரண்டொரு நாட்களுக்கு முன்னர் இதனை பார்க்க நேரம் வாய்த்தது. கய் ரிச்சிக்கே உரித்தான நக்கல், நையாண்டி நிறைந்த கதாபாத்திரங்கள், அற்புதமான ஒளிப்பதிவு, நேர்த்தியான இசை என அட்டகாசமான திரைப்படம். இரண்டாம் உலகப் போரின் போது நிகழ்ந்த … Continue reading ஊழ்
சிறை
Spoiler Alert. “சிறை” படம் பார்க்காதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம். படம் பார்த்துவிட்டு வந்து படித்துக் கொள்ளுங்கள். சிறை படம் பார்த்துவிட்டு வந்திருக்கிறேன். விவரிக்க முடியாத உணர்வுகளால் நெஞ்சம் நிறைந்திருக்கிறது. மனதை சற்று லேசாக்கிக் கொள்ளவே இதை எழுதுகிறேன். தமிழ் சினிமா பத்தாண்டுகளுக்கு ஒரு முறை ஒரு முத்தினைத் தேடி எடுக்கும். “சிறை” அப்படி ஒரு முத்து. உண்மைச் சம்பவங்களில் இருந்து நேரடியாகவோ, அதனைத் தழுவியோ வரும் படைப்புகள் மிகுந்த தாக்கத்துடன் இருப்பதற்குக் காரணங்கள் இரண்டு … Continue reading சிறை
பெயர்ச்சொல்
“சூப்பர் பேரு சார்”. என்று நான் சொன்னதற்கு, “என்ன சார்” என்று புருவத்தை உயர்த்தியவர், சடுதியில் புரிந்து கொண்டு, நெஞ்சில் இருந்த பேட்ஜை தொட்டவாறு, “ஹா..ஹா..ரைட் சார்..நன்றி நன்றி” என்று கண்கள் விரிய முகம் மலர்ந்தார். முகம் மலர்ந்தவர், சென்னை விமான நிலையத்தில் இருந்த சி.ஆர்.பி.எஃப் காவலர். பெயர் “பொற்சுடர்”. தூத்துக்குடி செல்லும் விமானத்திற்காக, எனது போர்டிங் பாஸை ஸ்கேன் செய்யும் போது நடந்த மிகச்சிறிய உரையாடல் அது. அத்தனை அழகான பெயர். பெயர் குறித்த இது … Continue reading பெயர்ச்சொல்
மரங்களைத் தொழுதல்
அன்று காலை அலுவலகத்துக்குச் செல்வதற்காக எப்போதும் போல பெருங்குடி சிக்னலில் நின்றிருந்தேன். வலப்புறம் மெட்ரோ வேலைகளுக்கான கட்டுமானம், இடப்புறம் அப்போல்லோ ஆஸ்பத்திரிக்கு கார் பார்க்கிங்காக செயல்பட்டுக் கொண்டிருக்கும் சர்வீஸ் லேன், பத்திருபது அடி முன்னே, பல ஆண்டுகளாக சீர் செய்யப்படாமல் இருக்கும் கிடங்கு, இவற்றினூடே எனக்கான பச்சை விளக்கு ஒளிர காத்துக் கொண்டிருந்தேன். சிக்னல் பச்சையானவுடன், எம்ஜிஆர் சாலையில் நான் நகரத் தொடங்கி வேகமெடுக்கவும், எங்கிருந்து வந்தார் என்று தெரியாமல், எனக்கு எதிர்ப்புறம் இருந்து ஒரு ஷேர் … Continue reading மரங்களைத் தொழுதல்
பொன்னிறப் பாதை
அந்த சிறிய கிளைச்சாலையின் முனையில் இருந்த ஸ்டார்பக்ஸ்லிருந்து எனக்கான ஹாட் சாக்லேட்டை வாங்கிக்கொண்டு வெளியே வந்தேன். கண்ணாடி கதவைத் திறந்தவுடன் குளிர் அப்பிக் கொண்டது. காலை பதினோரு மணிக்கு இப்படியொரு குளிரை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. அத்தனை தடிமனான ஓவர்கோட்டைத் துளைத்து மில்லிசெகண்டுகளுக்குள் நெஞ்சாங்கூட்டை அடைந்து விட்டது. பெரிதாக போக்குவரத்து இல்லாத சாலையைக் கடந்து சென்று மறுபுறம் இருந்த பெஞ்ச்சில் அமர்ந்தேன். உள்ளங்கை முழுக்க ஹாட் சாக்லேட்டின் இளஞ்சூடு பரவியிருந்தது. ஹாட் சாக்லேட் தொண்டையை அடைந்து, நெஞ்சாங்கூட்டை அடையும் … Continue reading பொன்னிறப் பாதை
எல்லார்க்கும் பெய்யும் மழை
“காட்டுச் சுனையைப் போலப் பிரவகிக்கும் மனசு” என்ற சொற்றொடரை, எழுத்தாளர் இயக்குநர் ராஜு முருகன் தனது “வட்டியும் முதலும்” நூலில் பயன்படுத்தியிருப்பார். அவர் சொல்வதைப் போல, “இதனால் நமக்கு என்ன ?” என்ற எதிர்பார்ப்பு இல்லாமல், காட்டுச் சுனையைப் போலப் பிரவகிக்கும் மனசு உள்ளவர்களால் தான், அவர்களைச் சுற்றி இருப்பவர்கள், தங்கள் வாழ்க்கையின் பெரும் மேடுகளை கடந்து செல்ல முடிகிறது. அப்படியான மனது வெகு சிலருக்கே வாய்க்கிறது. அந்த சிலரில் குமரனும் ஒருவர். குமரன் எங்கள் ஊரில் … Continue reading எல்லார்க்கும் பெய்யும் மழை