பஞ்ச் டயலாக் என்றதும் நினைவுக்கு வருவது ரஜினி தான். அதிலும் குறிப்பாக அண்ணாமலை படத்தில் அவர் பேசும் வசனம். சரத் பாபுவை நோக்கி “அசோக்..இது வரைக்கும் நீ இந்த அண்ணமலைய நண்பனாத்தான் பாத்திருக்க" என்று தொடங்கி சவால் விடும் காட்சி, பஞ்ச் டயலாக்குகளின் மாஸ்டர் பீஸ். இது போன்ற வசனங்கள் அனைத்து மொழிப் படங்களிலும் உண்டு. சட்டென நினைவுக்கு வருவது, Taken திரைப்படம். தன் மகளைக் கடத்தியவனிடம், லியம் நீசன் கூறும் - “I dont know … Continue reading பாண்டியன் வஞ்சினம்
Tag: வண்புகழ் மூவர்
பாண்டியன் வெள்ளியம்
சென்னை MRTS மற்றும் மெட்ரோ ரயில் பாலங்களின் தூண்களில் சங்க இலக்கியங்களில் பாடப்பட்ட மாந்தர்களின் படங்கள் வரையப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி சாலையில் விமான நிலையத்துக்குச் செல்லும் மெட்ரோ தூண்களில் இவற்றை அதிகம் பார்க்கலாம். அதில் “பாண்டியன் வெள்ளியம்” என்கிற பெயர் இன்று ஈர்த்தது. யாரென்று தேடிப்பார்க்கையில் புறநானூற்றில் பாடப்பட்டுள்ள பாண்டிய மன்னன் என்று தெரிய வந்தது. சிறப்பு என்னவென்றால், பாண்டியன் வெள்ளியம், சோழ மன்னர் ஒருவரோடு நட்போடு இருந்தது தான். பெரும்பாலும் தீராப்பகையோடு இருந்த சோழ பாண்டிய மன்னர்கள் … Continue reading பாண்டியன் வெள்ளியம்
வெண்ணிப் பறந்தலை
சோழ மன்னன் கரிகாலனுக்கும், சேர மன்னன் உதியன் சேரலாதனுக்கும் இடையே போர் நடந்த இடம் வெண்ணிப் பறந்தலை எனும் ஊராகும். கழாத்தலையாரும், வெண்ணிக்குயத்தியாரும் பாடி, புறநானூற்றில் (முறையே புறம் 65,66) தொகுக்கப்பட்டுள்ள பாடல்களில், இந்தப் போரைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. கழாத்தலையாரின் பாடல், கரிகாலனின் வெற்றியையும் அதனைத் தொடர்ந்து சேரலாதன் வடக்கிருந்து உயிர் நீத்ததையும் குறிப்பிடுகிறது. தோற்ற சேரன் ஏன் வடக்கிருந்து உயிர் நீத்தான் என்பதைத் தெரிந்து கொள்ளும் முன்னர், வடக்கிருத்தல் எனும் பண்டைய மரபைப் பற்றிப் … Continue reading வெண்ணிப் பறந்தலை
கடிமரந் தடித்தல்
தமிழ்ச் சமூகத்தில் மரங்களைப் போற்றிப் பாதுகாக்கும் மரபு சங்ககாலம் தொட்டே இருந்து வந்திருக்கிறது. குறிப்பாக, வேந்தர்களும், மன்னர்களும் மரங்களைத் தங்கள் குலக்குறியாகவும், மானம் மற்றும் வீரத்தின் அடையாளமாகவும் கருதியிருக்கின்றனர். தங்கள் முன்னோரும், குலதெய்வங்களும் இம்மரங்களில் உறைந்திருப்பதாக நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆகையால், இம்மரங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, தீங்கு வராமல் பாதுகாத்தனர். இவை காவல் மரங்கள் அல்லது கடி மரங்கள் என்று அழைக்கப்பட்டன. சேர, சோழ, பாண்டிய வேந்தர்கள் முறையே பனை, அத்தி மற்றும் வேம்பு ஆகியவற்றை தங்கள் … Continue reading கடிமரந் தடித்தல்
பெருஞ்சோற்றுதியன்
உதியன் சேரலாதன் எனும் சேர மன்னனின் பெருமையைக் கூறும் புறநானூற்றுப் பாடலில்(புறம் 2), அவன் பெருஞ்சோறு அளித்த நிகழ்வானது எடுத்துச் சொல்லப்படுகிறது. இதனால் பாடப்பட்டோன் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் ஆகிறான். பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் ! சேரலாதன் என்பதை சேரல் + ஆதன் என்று பொருள் கொளல் வேண்டும். சேர வேந்தனான ஆதன் என்று பொருள்படும். ஆதன் எனும் சேரமன்னனின் வழி வந்தவர்கள் சேரலாதன் எனும் குடிப்பெயரைக் கொள்வார்கள் என்று விளங்கிக் கொள்ளலாம். உதியன் என்பது … Continue reading பெருஞ்சோற்றுதியன்