பிரிட்டன் மற்றும் அமெரிக்காவைப் போலவே ஒரு பெரிய பேரரசை உருவாக்க வேண்டும் என்று ஜப்பானுக்கு ஒரு குறிக்கோள் இருந்தது. அதற்காக 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஜப்பான் தனது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும், இராணுவத்தை நவீனப்படுத்துவதற்கும் தேவையான முயற்சிகளில் இறங்கியது. இயற்கை வளங்களை சரியாக பயன்படுத்தி, கடல் சார்ந்த வர்த்தக வழிகளை உருவாக்குவதன் மூலம் தங்கள் குறிக்கோளை அடைய முடியும் என்று நம்பினார்கள். ஆனால், ஜப்பானின் சொந்த நிலப்பரப்பில் இரும்பு, நிலக்கரி, எண்ணெய் ஆகிய இயற்கை வளங்கள் இல்லை. ஒரு … Continue reading பிறர் தர வாரா ?
Tag: பொது
நெறி
வரலாற்றில் இருந்து நாம் கற்றுக் கொள்வதற்கு, இரண்டாம் உலகப் போருக்கு நிகரான வேறு ஒரு களஞ்சியம் இல்லையென்று நினைக்கிறேன். கடந்த நூற்றாண்டின் பேரிடரான இதனுடைய ஆவணங்கள் - தனிமனித செயல்பாடு, அரசியல் அமைப்பு, அறிவியல் என்று பல வேறுபட்ட தளங்கள் சார்ந்த நிகழ்வுகளும், தகவல்களும் கொட்டிக் கிடக்கும் அரிய பெட்டகம். அவை அனைத்திலும் மிக முக்கியமானதொரு ஆவணம் - நாஜி படைகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் நேச நாடுகள் (Allies) நடத்திய நியூரம்பெர்க் விசாரணை (Nuremberg Trials). சோவியத் … Continue reading நெறி
பெயர்ச்சொல்
“சூப்பர் பேரு சார்”. என்று நான் சொன்னதற்கு, “என்ன சார்” என்று புருவத்தை உயர்த்தியவர், சடுதியில் புரிந்து கொண்டு, நெஞ்சில் இருந்த பேட்ஜை தொட்டவாறு, “ஹா..ஹா..ரைட் சார்..நன்றி நன்றி” என்று கண்கள் விரிய முகம் மலர்ந்தார். முகம் மலர்ந்தவர், சென்னை விமான நிலையத்தில் இருந்த சி.ஆர்.பி.எஃப் காவலர். பெயர் “பொற்சுடர்”. தூத்துக்குடி செல்லும் விமானத்திற்காக, எனது போர்டிங் பாஸை ஸ்கேன் செய்யும் போது நடந்த மிகச்சிறிய உரையாடல் அது. அத்தனை அழகான பெயர். பெயர் குறித்த இது … Continue reading பெயர்ச்சொல்
மரங்களைத் தொழுதல்
அன்று காலை அலுவலகத்துக்குச் செல்வதற்காக எப்போதும் போல பெருங்குடி சிக்னலில் நின்றிருந்தேன். வலப்புறம் மெட்ரோ வேலைகளுக்கான கட்டுமானம், இடப்புறம் அப்போல்லோ ஆஸ்பத்திரிக்கு கார் பார்க்கிங்காக செயல்பட்டுக் கொண்டிருக்கும் சர்வீஸ் லேன், பத்திருபது அடி முன்னே, பல ஆண்டுகளாக சீர் செய்யப்படாமல் இருக்கும் கிடங்கு, இவற்றினூடே எனக்கான பச்சை விளக்கு ஒளிர காத்துக் கொண்டிருந்தேன். சிக்னல் பச்சையானவுடன், எம்ஜிஆர் சாலையில் நான் நகரத் தொடங்கி வேகமெடுக்கவும், எங்கிருந்து வந்தார் என்று தெரியாமல், எனக்கு எதிர்ப்புறம் இருந்து ஒரு ஷேர் … Continue reading மரங்களைத் தொழுதல்
கெட்ட பய சார் !
விவரம் தெரிந்து தியேட்டரில் பார்த்த முதல் ரஜினி படம் தளபதி. அப்பாவும் நானும் மட்டும் சென்று பார்த்த முதல் ரஜினி படமும் அதுதான். அதனால் தானோ என்னவோ இன்னமும் நினைவில் உள்ளது. கறாரான அப்பா. ஒரு முறை டாடி என்று அழைத்ததற்கு “என்னடா செல்லம் வேண்டிக் கெடக்கு ராஸ்கல்" என்று வெளுத்து விடும் அளவுக்கு ஸ்டிரிக்ட் ஆபிசர். படுக்கை விரிப்பை பிசிரில்லாமல் மடித்து வைப்பதில் தொடங்கி, புத்தகங்களை அளவு வாரியாக அடுக்கி வைப்பது வரையில் ஒரு இராணுவ … Continue reading கெட்ட பய சார் !
யாதும் கேளிர்
மாலை 5.30 மணி இருக்கும். அலுவலகம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். என் வேலை நாளின் இரண்டு சதவிகித நேரத்தை இரக்கமில்லாமல் தின்று செரிக்கும், காமாட்சி மருத்துவமனை சிக்னலில், பாலத்தின் பக்கவாட்டில் நின்றிருந்தேன். எஃப்.எம்-மில், ஏ...சீமை பூராவும் சுத்தி வரும் காட்டாறு எங்க நின்னாலும் அந்த எடம் என் ஊரு சாதி பாக்காத சனமே என் கூட்டு மோதிப் பாத்தாலே முடிப்பேன் பொலி போட்டு என்று பேரன்புக்குரிய அந்தோணிதாசன் அண்ணன் நொறுக்கிக் கொண்டிருந்தார். “கொஞ்சம் கிடைச்சாலும்…. பங்கு … Continue reading யாதும் கேளிர்
ரெக்கார்ட் டான்ஸ்
“பஞ்சாயத்” என்றொரு வெப் சீரிஸ். வன்முறை, வக்கிரமற்ற ஒரு கிராமப்புற டிராமா. குழப்பமான திரைக்கதை, மூளையை சோர்வடையச் செய்யும் உருவகங்களுக்கு மத்தியில், எம்பிஏ படிக்க ஆசைப்பட்டு, அது கிடைக்காமல், ஒரு கிராமத்தின் பஞ்சாயத்து அலுவலகத்தில் செயலாளராக வேலைக்குச் சேரும் கதாநாயகனைச் சுற்றி நடக்கும் லேசான ஒரு கதைக்களம். அந்த வெப்சீரிஸில் ஒரு காட்சி. கிராமத்தில் ரெக்கார்ட் டான்ஸ் நடக்கும் போது வரும் பிரச்சனையில், டான்ஸ் ஆடும் பெண்ணிற்கு காயம் பட்டுவிடும். கதாநாயகன் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று … Continue reading ரெக்கார்ட் டான்ஸ்
பிக்காலி
லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து ஊருக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறேன். நான் பயணித்துக் கொண்டிருக்கும் எமிரேட்ஸ் விமானம், பெட்ரோஸாவோட்ஸ்க் எனும் ரஷ்ய நகரின் மேல் பறந்து கொண்டிருப்பதாக ஜிபிஎஸ் சொல்கிறது. லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து துபாய்க்கு பதினாறு மணி நேரப் பயணம். பின்னார் அங்கிருந்து சென்னைக்கு ஒரு நான்கு மணி நேரம். முப்பதாயிரம் அடி உயரத்தில், வெறுமை மட்டுமே நிரம்பியிருக்கும் இந்த நீண்ட கணங்களில், மனம் திரும்பத் திரும்ப செல்வத்தின் நினைவுகளில் அலைபாய்கிறது. செல்வத்தைப் பற்றி எழுத வேண்டும் என்று … Continue reading பிக்காலி
ஊர்ச்சாமிகள்
எத்தனை தூரம் விலகி வந்தாலும், நம்மை வேர்களோடு பிணைத்து வைத்திருப்பது ஊரில் இருக்கும் சாமிகள் தான். எத்தனை சாமிகளை வழிபட்டாலும், எத்தனை கோயில்களுக்குச் சென்றாலும் சொந்த ஊரில் இருக்கும் சாமிகளைப் பார்க்கும் போது கிடைக்கும் அமைதியும், சந்தோசமும் வேறு. மற்ற சாமிகள் மேல் பக்தி இருக்கலாம். ஊர்ச் சாமிகள் மீது மட்டும் பக்தியைத் தாண்டிய ஏதோ ஒன்று இருக்கிறது. அது ஊர் மேல் உள்ள பற்றா, சாமியின் மேல் உள்ள நம்பிக்கையா, உறவுகளின் மீதுள்ள பிடிப்பா என்று … Continue reading ஊர்ச்சாமிகள்
ப்ளாஸ்டிக் நாற்காலி
இரவு பத்து மணி இருக்கும். அன்றைக்கான கடைசி மீட்டிங்கை முடித்து விட்டு, பெருங்குடியில் இருக்கும் அலுவலகத்தில் இருந்து கிளம்பிக் கொண்டிருந்தேன். அலுவலக ஸ்டோர் ரூமைத் தாண்டும் போது, அங்கே அமர்ந்து இருந்த செக்யூரிட்டி எழுந்து நின்று சிரித்தார். ஐம்பதுகளின் இறுதியில் இருப்பார். ஆறடிக்கு சற்றே மேற்பட்ட உயரம், ஒடிசலான தேகம், நன்கு சவரம் செய்யப்பட்ட முகம், ஒடுக்கு விழுந்த கன்னங்கள், பாதி வழுக்கைக்கு மேல் எண்ணெய் தேய்த்து இழுத்து வாரிய தலைமயிர். ஒரு எக்ஸ் சர்வீஸ்மேனுக்கான எல்லா … Continue reading ப்ளாஸ்டிக் நாற்காலி