கொக்கு உகிர் நிமிரல்

நிமிரல் என்ற சொல்லை சங்கப் பாடல்களில் சில இடங்களில் காண முடிகிறது. பெரும்பாலும் இந்தச் சொல் கொக்கு உகிர் நிமிரல் என்ற சொற்றொடரில் வருவதாகத் தான் அமைந்திருக்கிறது. புறநானூற்றில் கவிஞர் திருத்தாமனார், சேரமான வஞ்சனின் சிறப்புகளைக் குறிப்பிடும் பொழுது, அவன் தனக்கு கள்ளும், மான்கறியும் கொடுத்ததாகச் சொல்கிறார். அப்போது கொக்கின் நகம் போல இருக்கும் சோற்றையும் அளித்ததாகக் கூறுகிறார். நிழல்காண் தேறல் நிறைய வாக்கி, யான்உண அருளல் அன்றியும், தான்உண் மண்டைய கண்ட மான்வறைக் கருனை கொக்குஉகிர் … Continue reading கொக்கு உகிர் நிமிரல்

கெய்சர் வாழ்ந்து கொண்டிருக்கிறான் !

சோவியத் யூனியன் உருவாகக் காரணமாய் இருந்த ரஷ்யப் புரட்சிக்கு (1917) முன்னர் அந்நிலப்பரப்பு ஜார்(tsar) மன்னர்கள் ஆட்சியின் கீழ் இருந்தது. மன்னர்களின் பட்டப்பெயரான tsar என்ற சொல் caesar என்ற லத்தீன் மொழிச் சொல்லில் இருந்து மருவி பயன்பாட்டுக்கு வந்தது. ஆங்கிலத்தில் உச்சரிக்கும் போது, நாம் caesar-ஐ சீசர் என்றாலும், லத்தீன் மொழியில் அதன் உச்சரிப்பு கெய்சர் (kaesar) தான். இந்த கெய்சர் எனும் சொல் பண்டைய ரோம் பேரரசை ஆண்ட பேரரசன் ஜூலியஸ் கெய்சர் (Julius … Continue reading கெய்சர் வாழ்ந்து கொண்டிருக்கிறான் !

வாளுடைமை

தேவர் மகன் படத்தில் சக்தி, மாயனிடம் “உனக்குள்ள முழிச்சிட்டு இருக்க அதே மிருகம் எனக்குள்ள தூங்கிட்டு இருக்கு. அத வீணா எழுப்பிடாத” என்று சொல்வார். நீ செய்கிற அனைத்து தீய செயல்களையும், அக்கிரமங்களையும் என்னால் உனக்குத் திருப்பிச் செய்ய முடியும், ஆனால் அதைச் செய்யாமல் தவிர்க்கிறேன் என்பது தான் அதன் பொருள். அறம் என்பது அதுதான். அசுரன் படத்தில் சிவசாமி தன் மகன் சிதம்பரத்திடம் “அதிகாரத்திற்கு வந்ததுக்கு அப்புறம் அவனுக நமக்கு பண்ணத நீ யாருக்கும் பண்ணாத. … Continue reading வாளுடைமை

தலைகீழ் சிந்தனை

எந்த ஒரு பிரச்சனைக்கான தீர்வைக் காண்பதற்கும், மனதில் இருக்கும் ஒரு குறிக்கோளை அடைவதற்கும் அடித்தளம் மனிதனின்  சிந்தனை. எல்லோரும் தான் சிந்திக்கிறார்கள், கடினமாக உழைக்கிறார்கள். கடின உழைப்பாளிகள் , நன்கு யோசித்து முடிவெடுப்பவர்கள் அனைவரும் வெற்றி பெறுவதில்லை. கடின உழைப்பாளிகளுள், நினைத்த குறிக்கோளை அடைவது மிகச் சிலரே. காரணம், சிந்திக்கும் முறை. குறிக்கோள், உழைப்பு  போன்றவை ஜெயிப்போர் தோற்போர் இருவருக்கும் பொதுவானதாக இருந்தாலும், சிந்திக்கும் முறை மிகப் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தக் கூடியது. ஓவியம், எழுத்து போல … Continue reading தலைகீழ் சிந்தனை