பெயர்ச்சொல்

“சூப்பர் பேரு சார்”. என்று நான் சொன்னதற்கு, “என்ன சார்” என்று புருவத்தை உயர்த்தியவர், சடுதியில் புரிந்து கொண்டு, நெஞ்சில் இருந்த பேட்ஜை தொட்டவாறு, “ஹா..ஹா..ரைட் சார்..நன்றி நன்றி” என்று கண்கள் விரிய முகம் மலர்ந்தார்.  முகம் மலர்ந்தவர், சென்னை விமான நிலையத்தில் இருந்த சி.ஆர்.பி.எஃப் காவலர். பெயர் “பொற்சுடர்”.  தூத்துக்குடி செல்லும் விமானத்திற்காக, எனது போர்டிங் பாஸை ஸ்கேன் செய்யும் போது நடந்த மிகச்சிறிய உரையாடல் அது. அத்தனை அழகான பெயர். பெயர் குறித்த இது … Continue reading பெயர்ச்சொல்

மரங்களைத் தொழுதல்

அன்று காலை அலுவலகத்துக்குச் செல்வதற்காக எப்போதும் போல பெருங்குடி சிக்னலில் நின்றிருந்தேன். வலப்புறம் மெட்ரோ வேலைகளுக்கான கட்டுமானம், இடப்புறம் அப்போல்லோ ஆஸ்பத்திரிக்கு கார் பார்க்கிங்காக செயல்பட்டுக் கொண்டிருக்கும் சர்வீஸ் லேன், பத்திருபது அடி முன்னே, பல ஆண்டுகளாக சீர் செய்யப்படாமல் இருக்கும் கிடங்கு, இவற்றினூடே எனக்கான பச்சை விளக்கு ஒளிர காத்துக் கொண்டிருந்தேன். சிக்னல் பச்சையானவுடன், எம்ஜிஆர் சாலையில் நான் நகரத் தொடங்கி வேகமெடுக்கவும், எங்கிருந்து வந்தார் என்று தெரியாமல், எனக்கு எதிர்ப்புறம் இருந்து ஒரு ஷேர் … Continue reading மரங்களைத் தொழுதல்

யாதும் கேளிர்

மாலை 5.30 மணி இருக்கும். அலுவலகம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். என் வேலை நாளின் இரண்டு சதவிகித நேரத்தை இரக்கமில்லாமல் தின்று செரிக்கும், காமாட்சி மருத்துவமனை சிக்னலில், பாலத்தின் பக்கவாட்டில் நின்றிருந்தேன். எஃப்.எம்-மில், ஏ...சீமை பூராவும் சுத்தி வரும் காட்டாறு எங்க நின்னாலும் அந்த எடம் என் ஊரு சாதி பாக்காத சனமே என் கூட்டு மோதிப் பாத்தாலே முடிப்பேன் பொலி போட்டு என்று பேரன்புக்குரிய அந்தோணிதாசன் அண்ணன் நொறுக்கிக் கொண்டிருந்தார். “கொஞ்சம் கிடைச்சாலும்…. பங்கு … Continue reading யாதும் கேளிர்

ரெக்கார்ட் டான்ஸ்

“பஞ்சாயத்” என்றொரு வெப் சீரிஸ். வன்முறை, வக்கிரமற்ற ஒரு கிராமப்புற டிராமா. குழப்பமான திரைக்கதை, மூளையை சோர்வடையச் செய்யும் உருவகங்களுக்கு மத்தியில், எம்பிஏ படிக்க ஆசைப்பட்டு, அது கிடைக்காமல், ஒரு கிராமத்தின் பஞ்சாயத்து அலுவலகத்தில் செயலாளராக வேலைக்குச் சேரும் கதாநாயகனைச் சுற்றி நடக்கும் லேசான ஒரு கதைக்களம்.  அந்த வெப்சீரிஸில் ஒரு காட்சி. கிராமத்தில் ரெக்கார்ட் டான்ஸ் நடக்கும் போது வரும் பிரச்சனையில், டான்ஸ் ஆடும் பெண்ணிற்கு காயம் பட்டுவிடும். கதாநாயகன் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று … Continue reading ரெக்கார்ட் டான்ஸ்

ஊர்ச்சாமிகள்

எத்தனை தூரம் விலகி வந்தாலும், நம்மை வேர்களோடு பிணைத்து வைத்திருப்பது ஊரில் இருக்கும் சாமிகள் தான். எத்தனை சாமிகளை வழிபட்டாலும், எத்தனை கோயில்களுக்குச் சென்றாலும் சொந்த ஊரில் இருக்கும் சாமிகளைப் பார்க்கும் போது கிடைக்கும் அமைதியும், சந்தோசமும் வேறு. மற்ற சாமிகள் மேல் பக்தி இருக்கலாம். ஊர்ச் சாமிகள் மீது மட்டும் பக்தியைத் தாண்டிய ஏதோ ஒன்று இருக்கிறது. அது ஊர் மேல் உள்ள பற்றா, சாமியின் மேல் உள்ள நம்பிக்கையா, உறவுகளின் மீதுள்ள பிடிப்பா என்று … Continue reading ஊர்ச்சாமிகள்

அரூப தேவதைகள்

எந்த எதிர்பார்ப்புமில்லாமல் உதவி செய்பவர்கள் கண நேரத்தில் நம் வாழ்வினை அழகாக்கிச் சென்று விடுகிறார்கள். சிலரின் பெயரோ முகமோ நினைவில் இல்லாமற் போனாலும், ஒரு அரூபமாக அவர்களின் சித்திரம் மனதில் படிந்து விடுகிறது. மனம் சுயநலம் கொண்டு வெறியாடும் போதெல்லாம் இந்த அரூப தேவதைகள் தான் கைப்பிடித்துக் கரையேற்றுகிறார்கள். பெரும்பாலும் அந்த தேவதைகள் பெண்களாக இருந்து விடுகிறார்கள். Unsplash.com Ludovica Dri சில ஆண்டுகளுக்கு முன்னர், அமெரிக்கா சென்றவன் சென்னை திரும்பிக் கொண்டிருந்தேன். லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து … Continue reading அரூப தேவதைகள்

ப்ளாஸ்டிக் நாற்காலி

இரவு பத்து மணி இருக்கும். அன்றைக்கான கடைசி மீட்டிங்கை முடித்து விட்டு, பெருங்குடியில் இருக்கும் அலுவலகத்தில் இருந்து கிளம்பிக் கொண்டிருந்தேன். அலுவலக ஸ்டோர் ரூமைத் தாண்டும் போது, அங்கே அமர்ந்து இருந்த செக்யூரிட்டி எழுந்து நின்று சிரித்தார். ஐம்பதுகளின் இறுதியில் இருப்பார். ஆறடிக்கு சற்றே மேற்பட்ட உயரம், ஒடிசலான தேகம், நன்கு சவரம் செய்யப்பட்ட முகம், ஒடுக்கு விழுந்த கன்னங்கள், பாதி வழுக்கைக்கு மேல் எண்ணெய் தேய்த்து இழுத்து வாரிய தலைமயிர். ஒரு எக்ஸ் சர்வீஸ்மேனுக்கான எல்லா … Continue reading ப்ளாஸ்டிக் நாற்காலி

நேர்மை

சில வருடங்களுக்கு முன்பு வரையில், “நேர்மை” என்கிற சொல்லைக் கேட்டவுடன், கமல்ஹாசன் தான் நினைவுக்கு வந்து கொண்டிருந்தார். வசூல் ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில், கமலுக்கும் சிநேகாவுக்கும் இடையே நடக்கும் உரையாடலில், “எங்க அப்பா ஒரு நேர்மையான..” என்று கமல் சொல்லத் தொடங்கும் போது “போலீஸ் ஆபீசரா” என்பார் சிநேகா. “நேர்மையானனு சொன்னாலே போலீஸ் ஆபீசராத்தான் இருக்கணுமா ? எங்க அப்பா ஒரு நேர்மையான ஸ்கூல் வாத்தியாருங்க" என்பார் கமல். உண்மையில் அது வரையில் நேர்மை என்ற சொல்லை, … Continue reading நேர்மை

பச்சைப் புத்தகம்

அமெரிக்காவைச் சேர்ந்த விக்டர் க்ரீன் என்பவர் 1936ல் ஒரு புத்தகத்தைப் பதிப்பிக்கிறார். இந்தப் புத்தகம் புனைவோ, கட்டுரைத் தொகுப்போ அல்ல. ஒரு பயண வழிகாட்டி. இது கருப்பின மக்களின் பயன்பாட்டுக்காக மட்டுமே பதிப்பிடப்பட்டது. காரணம், அந்தப் புத்தகத்தில் இருந்தது கருப்பின மக்கள் பாதுகாப்போடு தங்கக்கூடிய இடங்கள் தொடர்பான தகவல் மட்டுமே. தங்கள் பயணங்களின் போது, ஆபத்தான இடங்களைத் தவிர்த்து, தங்களை அனுமதிக்கக் கூடிய விடுதிகள், உணவகங்களின் பட்டியல் அந்தப் புத்தகத்தில் இருந்தது.  அனுமதிக்கப்படாத இடங்களில், கருப்பின மக்கள் … Continue reading பச்சைப் புத்தகம்

லோகேஷும் இசையரசும்

ஏதேனும் ஒரு திங்கட்கிழமை அலுவலகத்திற்கு மட்டம் போட்டு விட்டு, ஊர் சுற்றுதல் எனக்குப் பிடித்தமான ஒன்று. ஊரே அந்த வாரத்திற்கான வேலைகளை இழுக்கத் தயாராக டிராஃபிக் சிக்னல்களில் நின்று கொண்டிருக்கும் போது,  அதனூடே நாம் மட்டும் குறிக்கோளில்லாமல் அலைந்து திரிதல் ஒரு privilege, அது தற்காலிகமானதாக இருந்தாலும் கூட. சரியாகத் திட்டமிட்டு நிதி விடுதலை (Financial Independence) அடைந்தவர்களுக்கு அந்த privilege தினசரி கிடைக்கும். எழுத்தாளர் மார்கன் ஹவுசலின் சொற்களில் - “The ability to do … Continue reading லோகேஷும் இசையரசும்