நிமிரல் என்ற சொல்லை சங்கப் பாடல்களில் சில இடங்களில் காண முடிகிறது. பெரும்பாலும் இந்தச் சொல் கொக்கு உகிர் நிமிரல் என்ற சொற்றொடரில் வருவதாகத் தான் அமைந்திருக்கிறது. புறநானூற்றில் கவிஞர் திருத்தாமனார், சேரமான வஞ்சனின் சிறப்புகளைக் குறிப்பிடும் பொழுது, அவன் தனக்கு கள்ளும், மான்கறியும் கொடுத்ததாகச் சொல்கிறார். அப்போது கொக்கின் நகம் போல இருக்கும் சோற்றையும் அளித்ததாகக் கூறுகிறார். நிழல்காண் தேறல் நிறைய வாக்கி, யான்உண அருளல் அன்றியும், தான்உண் மண்டைய கண்ட மான்வறைக் கருனை கொக்குஉகிர் … Continue reading கொக்கு உகிர் நிமிரல்
Tag: இலக்கியம்
மெலிதல்
1999ல் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், ரகுமான் மற்றும் விந்தியா நடிப்பில் வெளியான படம் சங்கமம். வடிவேலு, மணிவண்ணன் என்று ஏகப்பட்ட நல்ல கலைஞர்கள் இருந்தும் படம் சரியாகப் போகவில்லை. இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. பாலச்சந்தரின் சீடர். பாட்ஷா, அண்ணாமலை, சத்யா என்று cult classicக்குகளை எடுத்த இவர் எப்படி ஆளவந்தானையும், பாபா-வையும், சங்கமத்தையும் எடுத்தார் என்பது இன்று வரை புரியாத புதிர். படம் சரியாகப் போகவில்லை. ஆனால், ஏ.ஆர். ரகுமான் இசை, வைரமுத்து வரிகள் என பாடல்கள் … Continue reading மெலிதல்
தூங்கல் வங்கம்
இப்போது வரும் பாடல்களில், பத்தில் ஒன்பதையாவது அனிருத் பாடிவிடுகிறார். Spotify, FM என்று எதைத் தட்டினாலும் அனிருத் மயம்தான். அண்மையில் வெளியான மாவீரன் படத்தில், அவர் பாடிய “சீனா சீனா” என்ற ஒரு பாடல் நன்றாக மனதில் ஒட்டிக்கொண்டு விட்டது. குறிப்பாக அதில் வரும், “அன்னாண்ட அன்னாண்ட வங்கக் கரை இன்னாண்ட இன்னாண்ட கோல்டு பேலஸு" என்ற வரிகள். எழுதியவர் கபிலன். இந்த வரியின் மொத்தத் துள்ளலும் வங்கக்கரை எனும் சொல்லில் தான் அடங்கியிருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு … Continue reading தூங்கல் வங்கம்
பாண்டியன் வஞ்சினம்
பஞ்ச் டயலாக் என்றதும் நினைவுக்கு வருவது ரஜினி தான். அதிலும் குறிப்பாக அண்ணாமலை படத்தில் அவர் பேசும் வசனம். சரத் பாபுவை நோக்கி “அசோக்..இது வரைக்கும் நீ இந்த அண்ணமலைய நண்பனாத்தான் பாத்திருக்க" என்று தொடங்கி சவால் விடும் காட்சி, பஞ்ச் டயலாக்குகளின் மாஸ்டர் பீஸ். இது போன்ற வசனங்கள் அனைத்து மொழிப் படங்களிலும் உண்டு. சட்டென நினைவுக்கு வருவது, Taken திரைப்படம். தன் மகளைக் கடத்தியவனிடம், லியம் நீசன் கூறும் - “I dont know … Continue reading பாண்டியன் வஞ்சினம்
கல் பொரு சிறு நுரை
வாழ்க்கை, ஒவ்வொரு மனிதனுக்கும் முப்பதுகளில் தன்னை உருமாற்றிக் கொள்ளக்கூடிய வாய்ப்புகளை வழங்குகிறது என்று நினைக்கிறேன். இன்றைய சூழலில் ஒவ்வொருவரின் சமூக பொருளாதார நிலையைப் பொறுத்து, அந்த வாய்ப்பு ஐந்து பத்து ஆண்டுகள் முன்னரோ பின்னரோ அமையலாம். சராசரி நடுத்தர வர்க்கத்தை சார்ந்த மனிதனுக்கு, கல்வி பயின்று, தொழில் ஒன்றைக் கற்றுக் கொண்டு, குடும்ப வாழ்வில் நுழைந்த பிற்பாடு அந்த வாய்ப்பு பெரும்பாலும் முப்பதுகளில் நிகழ்கிறது. செய்யும் தொழில், உறவுகள், பொருளாதாரம் சார்ந்து பல சவால்களை நாம் சந்திக்க … Continue reading கல் பொரு சிறு நுரை