ரெக்கார்ட் டான்ஸ்

“பஞ்சாயத்” என்றொரு வெப் சீரிஸ். வன்முறை, வக்கிரமற்ற ஒரு கிராமப்புற டிராமா. குழப்பமான திரைக்கதை, மூளையை சோர்வடையச் செய்யும் உருவகங்களுக்கு மத்தியில், எம்பிஏ படிக்க ஆசைப்பட்டு, அது கிடைக்காமல், ஒரு கிராமத்தின் பஞ்சாயத்து அலுவலகத்தில் செயலாளராக வேலைக்குச் சேரும் கதாநாயகனைச் சுற்றி நடக்கும் லேசான ஒரு கதைக்களம்.  அந்த வெப்சீரிஸில் ஒரு காட்சி. கிராமத்தில் ரெக்கார்ட் டான்ஸ் நடக்கும் போது வரும் பிரச்சனையில், டான்ஸ் ஆடும் பெண்ணிற்கு காயம் பட்டுவிடும். கதாநாயகன் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று … Continue reading ரெக்கார்ட் டான்ஸ்

பாண்டியன் வஞ்சினம்

பஞ்ச் டயலாக் என்றதும் நினைவுக்கு வருவது ரஜினி தான். அதிலும் குறிப்பாக அண்ணாமலை படத்தில் அவர் பேசும் வசனம். சரத் பாபுவை நோக்கி “அசோக்..இது வரைக்கும் நீ இந்த அண்ணமலைய நண்பனாத்தான் பாத்திருக்க" என்று தொடங்கி சவால் விடும் காட்சி, பஞ்ச் டயலாக்குகளின் மாஸ்டர் பீஸ். இது போன்ற வசனங்கள் அனைத்து மொழிப் படங்களிலும் உண்டு. சட்டென நினைவுக்கு வருவது, Taken திரைப்படம். தன் மகளைக் கடத்தியவனிடம், லியம் நீசன் கூறும் - “I dont know … Continue reading பாண்டியன் வஞ்சினம்

வாளுடைமை

தேவர் மகன் படத்தில் சக்தி, மாயனிடம் “உனக்குள்ள முழிச்சிட்டு இருக்க அதே மிருகம் எனக்குள்ள தூங்கிட்டு இருக்கு. அத வீணா எழுப்பிடாத” என்று சொல்வார். நீ செய்கிற அனைத்து தீய செயல்களையும், அக்கிரமங்களையும் என்னால் உனக்குத் திருப்பிச் செய்ய முடியும், ஆனால் அதைச் செய்யாமல் தவிர்க்கிறேன் என்பது தான் அதன் பொருள். அறம் என்பது அதுதான். அசுரன் படத்தில் சிவசாமி தன் மகன் சிதம்பரத்திடம் “அதிகாரத்திற்கு வந்ததுக்கு அப்புறம் அவனுக நமக்கு பண்ணத நீ யாருக்கும் பண்ணாத. … Continue reading வாளுடைமை