கெய்சர் வாழ்ந்து கொண்டிருக்கிறான் !

சோவியத் யூனியன் உருவாகக் காரணமாய் இருந்த ரஷ்யப் புரட்சிக்கு (1917) முன்னர் அந்நிலப்பரப்பு ஜார்(tsar) மன்னர்கள் ஆட்சியின் கீழ் இருந்தது. மன்னர்களின் பட்டப்பெயரான tsar என்ற சொல் caesar என்ற லத்தீன் மொழிச் சொல்லில் இருந்து மருவி பயன்பாட்டுக்கு வந்தது. ஆங்கிலத்தில் உச்சரிக்கும் போது, நாம் caesar-ஐ சீசர் என்றாலும், லத்தீன் மொழியில் அதன் உச்சரிப்பு கெய்சர் (kaesar) தான். இந்த கெய்சர் எனும் சொல் பண்டைய ரோம் பேரரசை ஆண்ட பேரரசன் ஜூலியஸ் கெய்சர் (Julius … Continue reading கெய்சர் வாழ்ந்து கொண்டிருக்கிறான் !

டில்லீஸ்வரன்

டில்லீஸ்வரனைப் பற்றி தெரிந்து கொள்ள, முதலில் திருவரங்கம் கோயிலில் உள்ள துலுக்க நாச்சியாரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். டெல்லி, சுல்தான்களின் ஆட்சியின் கீழ் இருந்த போது, அங்கே இருந்த ஒரு சுல்தான் தெற்கு நோக்கிப் படையெடுத்தார். அந்தப் படையெடுப்பின் போது திருவரங்கம் கோயிலைத் தாக்கிய சுல்தானின் படைகள், அங்கே இருந்த பெருமாள் சிலையினை டெல்லிக்கு எடுத்துச் சென்றனர்.  கரம்பனூரைச் சேர்ந்த ஒரு பெண், தினசரி பெருமாளை வணங்கக் கூடிய பழக்கம் உடையவள். இப்படி பெருமாள் சிலையை … Continue reading டில்லீஸ்வரன்

செப்புகு

பண்டைய தமிழ் இலக்கியங்களில் வடக்கிருத்தல் எனும் தற்கொலைச் சடங்கினைப் பற்றிக் குறிப்புகள் இருக்கின்றன. இந்தச் சடங்கிற்கு “சல்லேகனை” என்று இன்னொரு பெயரும் உண்டு. போரில் புறமுதுகிட்டுத் தோற்றாலோ, தீராத துன்பம், நோய் முதலியவற்றால் அவதியுற்றாலோ சல்லேகனை மேற்கொண்டு உயிர் துறந்திருக்கிறார்கள். வரலாற்றில், இலக்கியத்தில் நமக்கு அறிமுகமான சிலர் இதனை மேற்கொண்டு உயிர் நீத்ததைப் பற்றி வெண்ணிப் பறந்தலை யில் எழுதியுள்ளேன். இதே போல் ஒரு தற்கொலைச் சடங்கு ஜப்பானிலும் இருந்திருக்கிறது. “செப்புகு" என்றழைக்கப்படும் அந்தச் சடங்கினை சாமுராய் … Continue reading செப்புகு

பரங்கி

தமிழ் வரலாற்றுப் புத்தகங்களிலும், பாடப் புத்தகங்களிலும் வெள்ளையரை “பரங்கியர்கள்" என்று குறிப்பிட்டு பார்த்திருப்போம். இந்த பரங்கியர் என்ற சொல்லின் வேர் சற்று சுவாரசியமானது. இதனைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள சில நூறு ஆண்டுகள் பின் செல்ல வேண்டும். சிலுவைப் போர்கள் நடந்த காலகட்டத்தில், மேற்கே இருந்து வந்த சண்டையிட வந்த வெளிநாட்டவர்களை பெர்சியர்கள் ஃபாரெஞ்சி (farenji) என்று அழைத்தார்கள். அவர்கள் பிரான்ஸிலிருந்து வந்தவர்கள் என்பதைக் குறிப்பதற்காக இந்த சொல் பயன்படுத்தப்பட்டது. வெளி நாட்டில் இருந்து தங்கள் … Continue reading பரங்கி