ஊர்ச்சாமிகள்

எத்தனை தூரம் விலகி வந்தாலும், நம்மை வேர்களோடு பிணைத்து வைத்திருப்பது ஊரில் இருக்கும் சாமிகள் தான். எத்தனை சாமிகளை வழிபட்டாலும், எத்தனை கோயில்களுக்குச் சென்றாலும் சொந்த ஊரில் இருக்கும் சாமிகளைப் பார்க்கும் போது கிடைக்கும் அமைதியும், சந்தோசமும் வேறு. மற்ற சாமிகள் மேல் பக்தி இருக்கலாம். ஊர்ச் சாமிகள் மீது மட்டும் பக்தியைத் தாண்டிய ஏதோ ஒன்று இருக்கிறது. அது ஊர் மேல் உள்ள பற்றா, சாமியின் மேல் உள்ள நம்பிக்கையா, உறவுகளின் மீதுள்ள பிடிப்பா என்று … Continue reading ஊர்ச்சாமிகள்

அரூப தேவதைகள்

எந்த எதிர்பார்ப்புமில்லாமல் உதவி செய்பவர்கள் கண நேரத்தில் நம் வாழ்வினை அழகாக்கிச் சென்று விடுகிறார்கள். சிலரின் பெயரோ முகமோ நினைவில் இல்லாமற் போனாலும், ஒரு அரூபமாக அவர்களின் சித்திரம் மனதில் படிந்து விடுகிறது. மனம் சுயநலம் கொண்டு வெறியாடும் போதெல்லாம் இந்த அரூப தேவதைகள் தான் கைப்பிடித்துக் கரையேற்றுகிறார்கள். பெரும்பாலும் அந்த தேவதைகள் பெண்களாக இருந்து விடுகிறார்கள். Unsplash.com Ludovica Dri சில ஆண்டுகளுக்கு முன்னர், அமெரிக்கா சென்றவன் சென்னை திரும்பிக் கொண்டிருந்தேன். லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து … Continue reading அரூப தேவதைகள்

ப்ளாஸ்டிக் நாற்காலி

இரவு பத்து மணி இருக்கும். அன்றைக்கான கடைசி மீட்டிங்கை முடித்து விட்டு, பெருங்குடியில் இருக்கும் அலுவலகத்தில் இருந்து கிளம்பிக் கொண்டிருந்தேன். அலுவலக ஸ்டோர் ரூமைத் தாண்டும் போது, அங்கே அமர்ந்து இருந்த செக்யூரிட்டி எழுந்து நின்று சிரித்தார். ஐம்பதுகளின் இறுதியில் இருப்பார். ஆறடிக்கு சற்றே மேற்பட்ட உயரம், ஒடிசலான தேகம், நன்கு சவரம் செய்யப்பட்ட முகம், ஒடுக்கு விழுந்த கன்னங்கள், பாதி வழுக்கைக்கு மேல் எண்ணெய் தேய்த்து இழுத்து வாரிய தலைமயிர். ஒரு எக்ஸ் சர்வீஸ்மேனுக்கான எல்லா … Continue reading ப்ளாஸ்டிக் நாற்காலி

நேர்மை

சில வருடங்களுக்கு முன்பு வரையில், “நேர்மை” என்கிற சொல்லைக் கேட்டவுடன், கமல்ஹாசன் தான் நினைவுக்கு வந்து கொண்டிருந்தார். வசூல் ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில், கமலுக்கும் சிநேகாவுக்கும் இடையே நடக்கும் உரையாடலில், “எங்க அப்பா ஒரு நேர்மையான..” என்று கமல் சொல்லத் தொடங்கும் போது “போலீஸ் ஆபீசரா” என்பார் சிநேகா. “நேர்மையானனு சொன்னாலே போலீஸ் ஆபீசராத்தான் இருக்கணுமா ? எங்க அப்பா ஒரு நேர்மையான ஸ்கூல் வாத்தியாருங்க" என்பார் கமல். உண்மையில் அது வரையில் நேர்மை என்ற சொல்லை, … Continue reading நேர்மை

பச்சைப் புத்தகம்

அமெரிக்காவைச் சேர்ந்த விக்டர் க்ரீன் என்பவர் 1936ல் ஒரு புத்தகத்தைப் பதிப்பிக்கிறார். இந்தப் புத்தகம் புனைவோ, கட்டுரைத் தொகுப்போ அல்ல. ஒரு பயண வழிகாட்டி. இது கருப்பின மக்களின் பயன்பாட்டுக்காக மட்டுமே பதிப்பிடப்பட்டது. காரணம், அந்தப் புத்தகத்தில் இருந்தது கருப்பின மக்கள் பாதுகாப்போடு தங்கக்கூடிய இடங்கள் தொடர்பான தகவல் மட்டுமே. தங்கள் பயணங்களின் போது, ஆபத்தான இடங்களைத் தவிர்த்து, தங்களை அனுமதிக்கக் கூடிய விடுதிகள், உணவகங்களின் பட்டியல் அந்தப் புத்தகத்தில் இருந்தது.  அனுமதிக்கப்படாத இடங்களில், கருப்பின மக்கள் … Continue reading பச்சைப் புத்தகம்

லோகேஷும் இசையரசும்

ஏதேனும் ஒரு திங்கட்கிழமை அலுவலகத்திற்கு மட்டம் போட்டு விட்டு, ஊர் சுற்றுதல் எனக்குப் பிடித்தமான ஒன்று. ஊரே அந்த வாரத்திற்கான வேலைகளை இழுக்கத் தயாராக டிராஃபிக் சிக்னல்களில் நின்று கொண்டிருக்கும் போது,  அதனூடே நாம் மட்டும் குறிக்கோளில்லாமல் அலைந்து திரிதல் ஒரு privilege, அது தற்காலிகமானதாக இருந்தாலும் கூட. சரியாகத் திட்டமிட்டு நிதி விடுதலை (Financial Independence) அடைந்தவர்களுக்கு அந்த privilege தினசரி கிடைக்கும். எழுத்தாளர் மார்கன் ஹவுசலின் சொற்களில் - “The ability to do … Continue reading லோகேஷும் இசையரசும்

மெலிதல்

1999ல் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், ரகுமான் மற்றும் விந்தியா நடிப்பில் வெளியான படம் சங்கமம். வடிவேலு, மணிவண்ணன் என்று ஏகப்பட்ட நல்ல கலைஞர்கள் இருந்தும் படம் சரியாகப் போகவில்லை. இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. பாலச்சந்தரின் சீடர். பாட்ஷா, அண்ணாமலை, சத்யா என்று cult classicக்குகளை எடுத்த இவர் எப்படி ஆளவந்தானையும், பாபா-வையும், சங்கமத்தையும் எடுத்தார் என்பது இன்று வரை புரியாத புதிர். படம் சரியாகப் போகவில்லை. ஆனால், ஏ.ஆர். ரகுமான் இசை, வைரமுத்து வரிகள் என பாடல்கள் … Continue reading மெலிதல்

தூங்கல் வங்கம்

இப்போது வரும் பாடல்களில், பத்தில் ஒன்பதையாவது அனிருத் பாடிவிடுகிறார். Spotify, FM என்று எதைத் தட்டினாலும் அனிருத் மயம்தான். அண்மையில் வெளியான மாவீரன் படத்தில், அவர் பாடிய “சீனா சீனா” என்ற ஒரு பாடல் நன்றாக மனதில் ஒட்டிக்கொண்டு விட்டது. குறிப்பாக அதில் வரும், “அன்னாண்ட அன்னாண்ட வங்கக் கரை இன்னாண்ட இன்னாண்ட கோல்டு பேலஸு" என்ற வரிகள். எழுதியவர் கபிலன். இந்த வரியின் மொத்தத் துள்ளலும் வங்கக்கரை எனும் சொல்லில் தான் அடங்கியிருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு … Continue reading தூங்கல் வங்கம்

கெய்சர் வாழ்ந்து கொண்டிருக்கிறான் !

சோவியத் யூனியன் உருவாகக் காரணமாய் இருந்த ரஷ்யப் புரட்சிக்கு (1917) முன்னர் அந்நிலப்பரப்பு ஜார்(tsar) மன்னர்கள் ஆட்சியின் கீழ் இருந்தது. மன்னர்களின் பட்டப்பெயரான tsar என்ற சொல் caesar என்ற லத்தீன் மொழிச் சொல்லில் இருந்து மருவி பயன்பாட்டுக்கு வந்தது. ஆங்கிலத்தில் உச்சரிக்கும் போது, நாம் caesar-ஐ சீசர் என்றாலும், லத்தீன் மொழியில் அதன் உச்சரிப்பு கெய்சர் (kaesar) தான். இந்த கெய்சர் எனும் சொல் பண்டைய ரோம் பேரரசை ஆண்ட பேரரசன் ஜூலியஸ் கெய்சர் (Julius … Continue reading கெய்சர் வாழ்ந்து கொண்டிருக்கிறான் !

வாளுடைமை

தேவர் மகன் படத்தில் சக்தி, மாயனிடம் “உனக்குள்ள முழிச்சிட்டு இருக்க அதே மிருகம் எனக்குள்ள தூங்கிட்டு இருக்கு. அத வீணா எழுப்பிடாத” என்று சொல்வார். நீ செய்கிற அனைத்து தீய செயல்களையும், அக்கிரமங்களையும் என்னால் உனக்குத் திருப்பிச் செய்ய முடியும், ஆனால் அதைச் செய்யாமல் தவிர்க்கிறேன் என்பது தான் அதன் பொருள். அறம் என்பது அதுதான். அசுரன் படத்தில் சிவசாமி தன் மகன் சிதம்பரத்திடம் “அதிகாரத்திற்கு வந்ததுக்கு அப்புறம் அவனுக நமக்கு பண்ணத நீ யாருக்கும் பண்ணாத. … Continue reading வாளுடைமை