அன்று காலை அலுவலகத்துக்குச் செல்வதற்காக எப்போதும் போல பெருங்குடி சிக்னலில் நின்றிருந்தேன். வலப்புறம் மெட்ரோ வேலைகளுக்கான கட்டுமானம், இடப்புறம் அப்போல்லோ ஆஸ்பத்திரிக்கு கார் பார்க்கிங்காக செயல்பட்டுக் கொண்டிருக்கும் சர்வீஸ் லேன், பத்திருபது அடி முன்னே, பல ஆண்டுகளாக சீர் செய்யப்படாமல் இருக்கும் கிடங்கு, இவற்றினூடே எனக்கான பச்சை விளக்கு ஒளிர காத்துக் கொண்டிருந்தேன். சிக்னல் பச்சையானவுடன், எம்ஜிஆர் சாலையில் நான் நகரத் தொடங்கி வேகமெடுக்கவும், எங்கிருந்து வந்தார் என்று தெரியாமல், எனக்கு எதிர்ப்புறம் இருந்து ஒரு ஷேர் … Continue reading மரங்களைத் தொழுதல்
Category: பதிவுகள்
ரெக்கார்ட் டான்ஸ்
“பஞ்சாயத்” என்றொரு வெப் சீரிஸ். வன்முறை, வக்கிரமற்ற ஒரு கிராமப்புற டிராமா. குழப்பமான திரைக்கதை, மூளையை சோர்வடையச் செய்யும் உருவகங்களுக்கு மத்தியில், எம்பிஏ படிக்க ஆசைப்பட்டு, அது கிடைக்காமல், ஒரு கிராமத்தின் பஞ்சாயத்து அலுவலகத்தில் செயலாளராக வேலைக்குச் சேரும் கதாநாயகனைச் சுற்றி நடக்கும் லேசான ஒரு கதைக்களம். அந்த வெப்சீரிஸில் ஒரு காட்சி. கிராமத்தில் ரெக்கார்ட் டான்ஸ் நடக்கும் போது வரும் பிரச்சனையில், டான்ஸ் ஆடும் பெண்ணிற்கு காயம் பட்டுவிடும். கதாநாயகன் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று … Continue reading ரெக்கார்ட் டான்ஸ்
பிக்காலி
லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து ஊருக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறேன். நான் பயணித்துக் கொண்டிருக்கும் எமிரேட்ஸ் விமானம், பெட்ரோஸாவோட்ஸ்க் எனும் ரஷ்ய நகரின் மேல் பறந்து கொண்டிருப்பதாக ஜிபிஎஸ் சொல்கிறது. லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து துபாய்க்கு பதினாறு மணி நேரப் பயணம். பின்னார் அங்கிருந்து சென்னைக்கு ஒரு நான்கு மணி நேரம். முப்பதாயிரம் அடி உயரத்தில், வெறுமை மட்டுமே நிரம்பியிருக்கும் இந்த நீண்ட கணங்களில், மனம் திரும்பத் திரும்ப செல்வத்தின் நினைவுகளில் அலைபாய்கிறது. செல்வத்தைப் பற்றி எழுத வேண்டும் என்று … Continue reading பிக்காலி
ஊர்ச்சாமிகள்
எத்தனை தூரம் விலகி வந்தாலும், நம்மை வேர்களோடு பிணைத்து வைத்திருப்பது ஊரில் இருக்கும் சாமிகள் தான். எத்தனை சாமிகளை வழிபட்டாலும், எத்தனை கோயில்களுக்குச் சென்றாலும் சொந்த ஊரில் இருக்கும் சாமிகளைப் பார்க்கும் போது கிடைக்கும் அமைதியும், சந்தோசமும் வேறு. மற்ற சாமிகள் மேல் பக்தி இருக்கலாம். ஊர்ச் சாமிகள் மீது மட்டும் பக்தியைத் தாண்டிய ஏதோ ஒன்று இருக்கிறது. அது ஊர் மேல் உள்ள பற்றா, சாமியின் மேல் உள்ள நம்பிக்கையா, உறவுகளின் மீதுள்ள பிடிப்பா என்று … Continue reading ஊர்ச்சாமிகள்
ப்ளாஸ்டிக் நாற்காலி
இரவு பத்து மணி இருக்கும். அன்றைக்கான கடைசி மீட்டிங்கை முடித்து விட்டு, பெருங்குடியில் இருக்கும் அலுவலகத்தில் இருந்து கிளம்பிக் கொண்டிருந்தேன். அலுவலக ஸ்டோர் ரூமைத் தாண்டும் போது, அங்கே அமர்ந்து இருந்த செக்யூரிட்டி எழுந்து நின்று சிரித்தார். ஐம்பதுகளின் இறுதியில் இருப்பார். ஆறடிக்கு சற்றே மேற்பட்ட உயரம், ஒடிசலான தேகம், நன்கு சவரம் செய்யப்பட்ட முகம், ஒடுக்கு விழுந்த கன்னங்கள், பாதி வழுக்கைக்கு மேல் எண்ணெய் தேய்த்து இழுத்து வாரிய தலைமயிர். ஒரு எக்ஸ் சர்வீஸ்மேனுக்கான எல்லா … Continue reading ப்ளாஸ்டிக் நாற்காலி
பச்சைப் புத்தகம்
அமெரிக்காவைச் சேர்ந்த விக்டர் க்ரீன் என்பவர் 1936ல் ஒரு புத்தகத்தைப் பதிப்பிக்கிறார். இந்தப் புத்தகம் புனைவோ, கட்டுரைத் தொகுப்போ அல்ல. ஒரு பயண வழிகாட்டி. இது கருப்பின மக்களின் பயன்பாட்டுக்காக மட்டுமே பதிப்பிடப்பட்டது. காரணம், அந்தப் புத்தகத்தில் இருந்தது கருப்பின மக்கள் பாதுகாப்போடு தங்கக்கூடிய இடங்கள் தொடர்பான தகவல் மட்டுமே. தங்கள் பயணங்களின் போது, ஆபத்தான இடங்களைத் தவிர்த்து, தங்களை அனுமதிக்கக் கூடிய விடுதிகள், உணவகங்களின் பட்டியல் அந்தப் புத்தகத்தில் இருந்தது. அனுமதிக்கப்படாத இடங்களில், கருப்பின மக்கள் … Continue reading பச்சைப் புத்தகம்