கொக்கு உகிர் நிமிரல்

நிமிரல் என்ற சொல்லை சங்கப் பாடல்களில் சில இடங்களில் காண முடிகிறது. பெரும்பாலும் இந்தச் சொல் கொக்கு உகிர் நிமிரல் என்ற சொற்றொடரில் வருவதாகத் தான் அமைந்திருக்கிறது. புறநானூற்றில் கவிஞர் திருத்தாமனார், சேரமான வஞ்சனின் சிறப்புகளைக் குறிப்பிடும் பொழுது, அவன் தனக்கு கள்ளும், மான்கறியும் கொடுத்ததாகச் சொல்கிறார். அப்போது கொக்கின் நகம் போல இருக்கும் சோற்றையும் அளித்ததாகக் கூறுகிறார். நிழல்காண் தேறல் நிறைய வாக்கி, யான்உண அருளல் அன்றியும், தான்உண் மண்டைய கண்ட மான்வறைக் கருனை கொக்குஉகிர் … Continue reading கொக்கு உகிர் நிமிரல்

மெலிதல்

1999ல் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், ரகுமான் மற்றும் விந்தியா நடிப்பில் வெளியான படம் சங்கமம். வடிவேலு, மணிவண்ணன் என்று ஏகப்பட்ட நல்ல கலைஞர்கள் இருந்தும் படம் சரியாகப் போகவில்லை. இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. பாலச்சந்தரின் சீடர். பாட்ஷா, அண்ணாமலை, சத்யா என்று cult classicக்குகளை எடுத்த இவர் எப்படி ஆளவந்தானையும், பாபா-வையும், சங்கமத்தையும் எடுத்தார் என்பது இன்று வரை புரியாத புதிர். படம் சரியாகப் போகவில்லை. ஆனால், ஏ.ஆர். ரகுமான் இசை, வைரமுத்து வரிகள் என பாடல்கள் … Continue reading மெலிதல்

தூங்கல் வங்கம்

இப்போது வரும் பாடல்களில், பத்தில் ஒன்பதையாவது அனிருத் பாடிவிடுகிறார். Spotify, FM என்று எதைத் தட்டினாலும் அனிருத் மயம்தான். அண்மையில் வெளியான மாவீரன் படத்தில், அவர் பாடிய “சீனா சீனா” என்ற ஒரு பாடல் நன்றாக மனதில் ஒட்டிக்கொண்டு விட்டது. குறிப்பாக அதில் வரும், “அன்னாண்ட அன்னாண்ட வங்கக் கரை இன்னாண்ட இன்னாண்ட கோல்டு பேலஸு" என்ற வரிகள். எழுதியவர் கபிலன். இந்த வரியின் மொத்தத் துள்ளலும் வங்கக்கரை எனும் சொல்லில் தான் அடங்கியிருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு … Continue reading தூங்கல் வங்கம்

பாண்டியன் வஞ்சினம்

பஞ்ச் டயலாக் என்றதும் நினைவுக்கு வருவது ரஜினி தான். அதிலும் குறிப்பாக அண்ணாமலை படத்தில் அவர் பேசும் வசனம். சரத் பாபுவை நோக்கி “அசோக்..இது வரைக்கும் நீ இந்த அண்ணமலைய நண்பனாத்தான் பாத்திருக்க" என்று தொடங்கி சவால் விடும் காட்சி, பஞ்ச் டயலாக்குகளின் மாஸ்டர் பீஸ். இது போன்ற வசனங்கள் அனைத்து மொழிப் படங்களிலும் உண்டு. சட்டென நினைவுக்கு வருவது, Taken திரைப்படம். தன் மகளைக் கடத்தியவனிடம், லியம் நீசன் கூறும் - “I dont know … Continue reading பாண்டியன் வஞ்சினம்

கல் பொரு சிறு நுரை

வாழ்க்கை, ஒவ்வொரு மனிதனுக்கும் முப்பதுகளில் தன்னை உருமாற்றிக் கொள்ளக்கூடிய வாய்ப்புகளை வழங்குகிறது என்று நினைக்கிறேன். இன்றைய சூழலில் ஒவ்வொருவரின் சமூக பொருளாதார நிலையைப் பொறுத்து, அந்த வாய்ப்பு ஐந்து பத்து ஆண்டுகள் முன்னரோ பின்னரோ அமையலாம். சராசரி நடுத்தர வர்க்கத்தை சார்ந்த மனிதனுக்கு, கல்வி பயின்று, தொழில் ஒன்றைக் கற்றுக் கொண்டு, குடும்ப வாழ்வில் நுழைந்த பிற்பாடு அந்த வாய்ப்பு பெரும்பாலும் முப்பதுகளில் நிகழ்கிறது.  செய்யும் தொழில், உறவுகள், பொருளாதாரம் சார்ந்து பல சவால்களை நாம் சந்திக்க … Continue reading கல் பொரு சிறு நுரை

பாண்டியன் வெள்ளியம்

சென்னை MRTS மற்றும் மெட்ரோ ரயில் பாலங்களின் தூண்களில் சங்க இலக்கியங்களில் பாடப்பட்ட மாந்தர்களின் படங்கள் வரையப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி சாலையில் விமான நிலையத்துக்குச் செல்லும் மெட்ரோ தூண்களில் இவற்றை அதிகம் பார்க்கலாம். அதில் “பாண்டியன் வெள்ளியம்” என்கிற பெயர் இன்று ஈர்த்தது. யாரென்று தேடிப்பார்க்கையில் புறநானூற்றில் பாடப்பட்டுள்ள பாண்டிய மன்னன் என்று தெரிய வந்தது. சிறப்பு என்னவென்றால், பாண்டியன் வெள்ளியம், சோழ மன்னர் ஒருவரோடு நட்போடு இருந்தது தான். பெரும்பாலும் தீராப்பகையோடு இருந்த சோழ பாண்டிய மன்னர்கள் … Continue reading பாண்டியன் வெள்ளியம்

வெண்ணிப் பறந்தலை

சோழ மன்னன் கரிகாலனுக்கும், சேர மன்னன் உதியன் சேரலாதனுக்கும் இடையே போர் நடந்த இடம் வெண்ணிப் பறந்தலை எனும் ஊராகும். கழாத்தலையாரும், வெண்ணிக்குயத்தியாரும் பாடி, புறநானூற்றில் (முறையே புறம் 65,66) தொகுக்கப்பட்டுள்ள பாடல்களில், இந்தப் போரைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.  கழாத்தலையாரின் பாடல், கரிகாலனின் வெற்றியையும் அதனைத் தொடர்ந்து சேரலாதன் வடக்கிருந்து உயிர் நீத்ததையும் குறிப்பிடுகிறது. தோற்ற சேரன் ஏன் வடக்கிருந்து உயிர் நீத்தான் என்பதைத் தெரிந்து கொள்ளும் முன்னர், வடக்கிருத்தல் எனும் பண்டைய மரபைப் பற்றிப் … Continue reading வெண்ணிப் பறந்தலை

கடிமரந் தடித்தல்

தமிழ்ச் சமூகத்தில் மரங்களைப் போற்றிப் பாதுகாக்கும் மரபு சங்ககாலம் தொட்டே இருந்து வந்திருக்கிறது. குறிப்பாக, வேந்தர்களும், மன்னர்களும் மரங்களைத் தங்கள் குலக்குறியாகவும், மானம் மற்றும் வீரத்தின் அடையாளமாகவும் கருதியிருக்கின்றனர். தங்கள் முன்னோரும், குலதெய்வங்களும் இம்மரங்களில் உறைந்திருப்பதாக நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆகையால், இம்மரங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, தீங்கு வராமல் பாதுகாத்தனர். இவை காவல் மரங்கள் அல்லது கடி மரங்கள் என்று அழைக்கப்பட்டன.   சேர, சோழ, பாண்டிய வேந்தர்கள் முறையே பனை, அத்தி மற்றும் வேம்பு ஆகியவற்றை தங்கள் … Continue reading கடிமரந் தடித்தல்

பெருஞ்சோற்றுதியன்

உதியன் சேரலாதன் எனும் சேர மன்னனின் பெருமையைக் கூறும் புறநானூற்றுப் பாடலில்(புறம் 2), அவன் பெருஞ்சோறு அளித்த நிகழ்வானது எடுத்துச் சொல்லப்படுகிறது. இதனால் பாடப்பட்டோன் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் ஆகிறான். பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் ! சேரலாதன் என்பதை சேரல் + ஆதன் என்று பொருள் கொளல் வேண்டும். சேர வேந்தனான ஆதன் என்று பொருள்படும். ஆதன் எனும் சேரமன்னனின் வழி வந்தவர்கள் சேரலாதன் எனும் குடிப்பெயரைக் கொள்வார்கள் என்று விளங்கிக் கொள்ளலாம். உதியன் என்பது … Continue reading பெருஞ்சோற்றுதியன்