அறம்

சென்னை மாநகராட்சியின் சுகாதாரத் தொழிலாளர்களில் ஒருவர் நாகராஜ் சார். கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக எனக்கு அவரைத் தெரியும். தெரியும் என்றால், வெறும் அறிமுகம் மட்டும்தான், அதிகப்படியான பழக்க வழக்கமோ, பேச்சுவார்த்தையோ இல்லை. காலை நடைபயிற்சிக்கு செல்லும் போது எதிரே குப்பை வண்டியோடு  வருவார். இப்போது இருக்கும் பேட்டரி வண்டி அல்ல, பழைய மீன் பாடி மாடல் வண்டி. ஒற்றைக் கையில் அதனை இழுத்துக் கொண்டு, மற்றொரு கையை அநாயசமாக வீசிக் கொண்டு வருவார். டவுசர், பச்சை … Continue reading அறம்

கெட்ட பய சார் !

விவரம் தெரிந்து தியேட்டரில் பார்த்த முதல் ரஜினி படம் தளபதி. அப்பாவும் நானும் மட்டும் சென்று பார்த்த முதல் ரஜினி படமும் அதுதான். அதனால் தானோ என்னவோ இன்னமும் நினைவில் உள்ளது. கறாரான அப்பா. ஒரு முறை டாடி என்று அழைத்ததற்கு “என்னடா செல்லம் வேண்டிக் கெடக்கு ராஸ்கல்" என்று வெளுத்து விடும் அளவுக்கு ஸ்டிரிக்ட் ஆபிசர். படுக்கை விரிப்பை பிசிரில்லாமல் மடித்து வைப்பதில் தொடங்கி, புத்தகங்களை அளவு வாரியாக அடுக்கி வைப்பது வரையில் ஒரு இராணுவ … Continue reading கெட்ட பய சார் !

யாதும் கேளிர்

மாலை 5.30 மணி இருக்கும். அலுவலகம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். என் வேலை நாளின் இரண்டு சதவிகித நேரத்தை இரக்கமில்லாமல் தின்று செரிக்கும், காமாட்சி மருத்துவமனை சிக்னலில், பாலத்தின் பக்கவாட்டில் நின்றிருந்தேன். எஃப்.எம்-மில், ஏ...சீமை பூராவும் சுத்தி வரும் காட்டாறு எங்க நின்னாலும் அந்த எடம் என் ஊரு சாதி பாக்காத சனமே என் கூட்டு மோதிப் பாத்தாலே முடிப்பேன் பொலி போட்டு என்று பேரன்புக்குரிய அந்தோணிதாசன் அண்ணன் நொறுக்கிக் கொண்டிருந்தார். “கொஞ்சம் கிடைச்சாலும்…. பங்கு … Continue reading யாதும் கேளிர்

ரெக்கார்ட் டான்ஸ்

“பஞ்சாயத்” என்றொரு வெப் சீரிஸ். வன்முறை, வக்கிரமற்ற ஒரு கிராமப்புற டிராமா. குழப்பமான திரைக்கதை, மூளையை சோர்வடையச் செய்யும் உருவகங்களுக்கு மத்தியில், எம்பிஏ படிக்க ஆசைப்பட்டு, அது கிடைக்காமல், ஒரு கிராமத்தின் பஞ்சாயத்து அலுவலகத்தில் செயலாளராக வேலைக்குச் சேரும் கதாநாயகனைச் சுற்றி நடக்கும் லேசான ஒரு கதைக்களம்.  அந்த வெப்சீரிஸில் ஒரு காட்சி. கிராமத்தில் ரெக்கார்ட் டான்ஸ் நடக்கும் போது வரும் பிரச்சனையில், டான்ஸ் ஆடும் பெண்ணிற்கு காயம் பட்டுவிடும். கதாநாயகன் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று … Continue reading ரெக்கார்ட் டான்ஸ்

பிக்காலி

லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து ஊருக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறேன். நான் பயணித்துக் கொண்டிருக்கும் எமிரேட்ஸ் விமானம், பெட்ரோஸாவோட்ஸ்க் எனும் ரஷ்ய நகரின் மேல் பறந்து கொண்டிருப்பதாக ஜிபிஎஸ் சொல்கிறது. லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து துபாய்க்கு பதினாறு மணி நேரப் பயணம். பின்னார் அங்கிருந்து சென்னைக்கு ஒரு நான்கு மணி நேரம். முப்பதாயிரம் அடி உயரத்தில், வெறுமை மட்டுமே நிரம்பியிருக்கும் இந்த நீண்ட கணங்களில், மனம் திரும்பத் திரும்ப செல்வத்தின் நினைவுகளில் அலைபாய்கிறது. செல்வத்தைப் பற்றி எழுத வேண்டும் என்று … Continue reading பிக்காலி

ஊர்ச்சாமிகள்

எத்தனை தூரம் விலகி வந்தாலும், நம்மை வேர்களோடு பிணைத்து வைத்திருப்பது ஊரில் இருக்கும் சாமிகள் தான். எத்தனை சாமிகளை வழிபட்டாலும், எத்தனை கோயில்களுக்குச் சென்றாலும் சொந்த ஊரில் இருக்கும் சாமிகளைப் பார்க்கும் போது கிடைக்கும் அமைதியும், சந்தோசமும் வேறு. மற்ற சாமிகள் மேல் பக்தி இருக்கலாம். ஊர்ச் சாமிகள் மீது மட்டும் பக்தியைத் தாண்டிய ஏதோ ஒன்று இருக்கிறது. அது ஊர் மேல் உள்ள பற்றா, சாமியின் மேல் உள்ள நம்பிக்கையா, உறவுகளின் மீதுள்ள பிடிப்பா என்று … Continue reading ஊர்ச்சாமிகள்

அரூப தேவதைகள்

எந்த எதிர்பார்ப்புமில்லாமல் உதவி செய்பவர்கள் கண நேரத்தில் நம் வாழ்வினை அழகாக்கிச் சென்று விடுகிறார்கள். சிலரின் பெயரோ முகமோ நினைவில் இல்லாமற் போனாலும், ஒரு அரூபமாக அவர்களின் சித்திரம் மனதில் படிந்து விடுகிறது. மனம் சுயநலம் கொண்டு வெறியாடும் போதெல்லாம் இந்த அரூப தேவதைகள் தான் கைப்பிடித்துக் கரையேற்றுகிறார்கள். பெரும்பாலும் அந்த தேவதைகள் பெண்களாக இருந்து விடுகிறார்கள். Unsplash.com Ludovica Dri சில ஆண்டுகளுக்கு முன்னர், அமெரிக்கா சென்றவன் சென்னை திரும்பிக் கொண்டிருந்தேன். லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து … Continue reading அரூப தேவதைகள்

ப்ளாஸ்டிக் நாற்காலி

இரவு பத்து மணி இருக்கும். அன்றைக்கான கடைசி மீட்டிங்கை முடித்து விட்டு, பெருங்குடியில் இருக்கும் அலுவலகத்தில் இருந்து கிளம்பிக் கொண்டிருந்தேன். அலுவலக ஸ்டோர் ரூமைத் தாண்டும் போது, அங்கே அமர்ந்து இருந்த செக்யூரிட்டி எழுந்து நின்று சிரித்தார். ஐம்பதுகளின் இறுதியில் இருப்பார். ஆறடிக்கு சற்றே மேற்பட்ட உயரம், ஒடிசலான தேகம், நன்கு சவரம் செய்யப்பட்ட முகம், ஒடுக்கு விழுந்த கன்னங்கள், பாதி வழுக்கைக்கு மேல் எண்ணெய் தேய்த்து இழுத்து வாரிய தலைமயிர். ஒரு எக்ஸ் சர்வீஸ்மேனுக்கான எல்லா … Continue reading ப்ளாஸ்டிக் நாற்காலி

நேர்மை

சில வருடங்களுக்கு முன்பு வரையில், “நேர்மை” என்கிற சொல்லைக் கேட்டவுடன், கமல்ஹாசன் தான் நினைவுக்கு வந்து கொண்டிருந்தார். வசூல் ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில், கமலுக்கும் சிநேகாவுக்கும் இடையே நடக்கும் உரையாடலில், “எங்க அப்பா ஒரு நேர்மையான..” என்று கமல் சொல்லத் தொடங்கும் போது “போலீஸ் ஆபீசரா” என்பார் சிநேகா. “நேர்மையானனு சொன்னாலே போலீஸ் ஆபீசராத்தான் இருக்கணுமா ? எங்க அப்பா ஒரு நேர்மையான ஸ்கூல் வாத்தியாருங்க" என்பார் கமல். உண்மையில் அது வரையில் நேர்மை என்ற சொல்லை, … Continue reading நேர்மை

பச்சைப் புத்தகம்

அமெரிக்காவைச் சேர்ந்த விக்டர் க்ரீன் என்பவர் 1936ல் ஒரு புத்தகத்தைப் பதிப்பிக்கிறார். இந்தப் புத்தகம் புனைவோ, கட்டுரைத் தொகுப்போ அல்ல. ஒரு பயண வழிகாட்டி. இது கருப்பின மக்களின் பயன்பாட்டுக்காக மட்டுமே பதிப்பிடப்பட்டது. காரணம், அந்தப் புத்தகத்தில் இருந்தது கருப்பின மக்கள் பாதுகாப்போடு தங்கக்கூடிய இடங்கள் தொடர்பான தகவல் மட்டுமே. தங்கள் பயணங்களின் போது, ஆபத்தான இடங்களைத் தவிர்த்து, தங்களை அனுமதிக்கக் கூடிய விடுதிகள், உணவகங்களின் பட்டியல் அந்தப் புத்தகத்தில் இருந்தது.  அனுமதிக்கப்படாத இடங்களில், கருப்பின மக்கள் … Continue reading பச்சைப் புத்தகம்