புத்தகக் குறிப்புகள்

செடிய வச்சித் தண்ணி ஊத்துனவங்களெ மறந்துப்புட்டு, பூத்ததப் பறிக்க வந்தவங்களெ நல்லவங்கன்னு நெனக்கிறது, செய்யுறதுதான ஒலக நடெமொற.

அம்மா, வீடியோ மாரியம்மன் (இமையம்)

தமிழனுக்கு இயல்பாகவே தன்னைத் தவிர எல்லோர் குறித்தும் கவலையுண்டு.

சொற்களைத் தவிர் வேறு துணையில்லை (லஷ்மி சரவணகுமார்)

அதிகாரத்தை ரெண்டு வழியிலே மனுஷன் ருசிக்கலாம். கீழே உள்ளவங்க கிட்ட அதை செலுத்திப்பாக்கலாம். மேலே பாத்து கொஞ்சம் கொஞ்சமா முன்னேறிட்டே இருக்கலாம். ரெண்டுமே பெரிய திரில் உள்ள ஆட்டங்கள்.

யானை டாக்டர் (ஜெயமோகன்)

முயலை ஓடி வெல்லமுடியாது. முயல் பிடிப்பதற்கு முயல் போல யோசிக்கவேண்டும். அது எங்கே ஓடப்போகிறது என்று தெரிந்து முன்கூட்டியே அங்கே போய் நிற்க வேண்டும்.

கடவுள் தொடங்கிய இடம் (அ. முத்துலிங்கம்)

மனுசனுக்கு சோறுதான வேணும் ? இந்த ஊட்டுல நூறு பேரு இருந்தாலும் அத்தன பேருக்கும் அந்தக் காடு சோறு போட்டுடும். மனுசன் நூறு மாடி கட்டணும், கப்பல் வாங்கணுமின்னு ஆசப்பட்டா , அதுக்குக் காடு என்னா பண்ணும் ?

உயிர்நாடி, வீடியோ மாரியம்மன் (இமையம்)

கடவுள் நம்பிக்கைகள், பிற நம்பிக்கைகள் போன்றவற்றில் நாம் கவனம் செலுத்துவதை விட காலத்தின் மீது நம்பிக்கை வைப்பது எளிது.

5 முதலாளிகளின் கதை (ஜோதி G)

உலகத்திலேயே சிற்பக்கலையின் அற்புதம் பூரணமாக விளங்கும் வடிவங்கள் இரண்டுதான். ஒன்று நடராஜர்; இன்னொன்று புத்தர்.

பொன்னியின் செல்வன் – 1 (கல்கி)

கடலில் எல்லா துளிகளும் கடலே.

பத்மவியூகம் (ஜெயமோகன்)

நெற்றியில் விழுந்திருக்கும் இரண்டொரு கேசங்களைத் தவிர அவள் உடம்பில் வேறு ஆபரணம் ஒன்றுமில்லை.

வடக்கு வீதி (அ. முத்துலிங்கம்)